Accident in Perambalur: One leg broken due to pressing accelerator instead of brake! Another seriously injured !!

பெரம்பலூரில் உள்ள தனியார் பெட்ரோர் பங்கிற்கு இன்று மதியம், பெட்ரோல் போட வந்த காரின் ஓட்டுனர் காரை நிறுத்த பிரேக் அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால், எதிரில் காற்று பிடித்து கொண்டிருந்தவர்கள் மீது மோதியதல் ஒருவரின் கால் உடைந்தது. மற்றொருவரின் கால் பலத்த காயமடைந்தது.

பெரம்பலூர் முருகன் கோவிலில் அர்ச்சகராக இருப்பவர் ரமேஷ். இவர் புதிதாக கார் ஒன்றை வாங்கி ஓட்டி வருகிறார்.

பெட்ரோல் பங்கில் காருக்கு பெட்ரோல் போட நகர்த்தி நிறுத்த முயன்ற போது, பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால், கார் வேகமாக சென்று எதிரில் பைக்கிற்கு காற்று பிடித்து கொண்டிருந்து பைக் மற்றும் தடுப்புகள் மீது டம் என பலத்த சத்தத்துடன் மோதி நின்றது.

அதில், பைக்கிற்கு காற்று பிடித்து கொண்டிருந்த பெட்ரோல் பங் ஊழியர் பச்சமுத்து என்பவரின் மீதும், பைக் உரிமையாளர் மீதும் மோதியதில், பச்சமுத்துவின் வலது கால் உடைந்தது. மற்றொருவருக்கு கால் பலத்த காயம் அடைந்தது.

இதை பார்த்த அவர்கள் காயம் பட்டவர்களை மீட்டு, பெரம்பலூர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய ரமேஷ் எவ்வித சலனமும் இல்லாமல் அமைதியாக நின்று கொண்டு தவறு நடந்து விட்டதாக தெரிவித்தார்.

அவரை பார்த்த பொதுமக்கள் அர்ச்சகர் காரை ஓட்டத் தெரியமல் கம்பத்தில் இடித்தது, நடந்து சென்றவர்களை தள்ளிவிட்டது என அவர் ஏற்படுத்திய விபத்துகளை விவரித்து, திட்டி தீர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய ரமேஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!