Accident near Perambalur: Mother died ! Son was injured
பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் அருகே உள்ள களரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காதர்பாட்சா. இவரது மனைவி அமீனா பீவி (வயது 80). இவர்களது மகன் ராஜாமுஹமது (வயது58).
இன்று அமீனாபீவியும், அவரது மகன் ராஜாமுஹமதுவும் பெரம்பலூர் சென்று விட்டு சொந்த ஊரான களரம்பட்டிக்கு திரும்ப மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அம்மாபாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னே (துறையூரை நோக்கி) சென்று கொண்டிருந்த கண்டெயினர் லாரி முந்த முயன்று உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில், அமீனாபிவீ லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த ராஜா முஹமது பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.