Accident near Perambalur today: car-lorry collision, 2 killed! 4 injured!
பெரம்பலூர் அருகே இன்றும் ஏற்பட்ட விபத்தில், சிங்கப்பூர் செல்ல திருச்சி சென்ற வாலிபர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள சேர்வராயன் குப்பம் பகுதியை சேர்ந்த செந்தில் மகன் ரஞ்சித்குமார் (27). சிங்கப்பூரில் செல்கிறார். இவருடன் கள்ளக்குறிச்சி மாவட்டம், ஒகையூர் உச்சிமணக்காடு பகுதியை சேர்ந்த செல்வாவின் மனைவி மகேஸ்வரி (22), இவரது மகள் சாருநேத்ரா (5) வும் சிங்கப்பூர் செல்கின்றனர்.
இவர்களை திருச்சி விமான நிலையத்திற்கு வழி அனுப்பி வைப்பதற்காக, அவரது உறவினர் நாகமுத்து, மற்றும் டிரைவர் சேர்வராயன் குப்பத்தை சேர்ந்த முத்துசாமி (37), ஆகியேர் (TN 07 BD 6210) காரில் திருச்சியை நோக்கி சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தனர். பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம், மேற்கு தெருவை சேர்ந்த லாரி ஓட்டுனர் மகாபிரபு (47), மற்றும் காரில் வந்த மகேஸ்வரி, ஜெயவேல், நாகமுத்து, முத்துசாமி ஆகியோர் காயங்களுடன் சிறுவாச்சூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கார், பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள திருவளக்குறிச்சி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, முன்னே சென்ற டிப்பர் லாரி, வலது புறமாக திரும்பியது, இதில் கார் லாரியின் பின்பகுதியில் மோதி பலத்த சேதமடைந்தது. விபத்தில் சம்பவ இடத்திலேயே ரஞ்சித்குமார் உயிரிழந்தார். குழந்தை சாருநேத்ரா, சிறுவாச்சூர் தனியார் மருத்துமனை கல்லூரிக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த 3 நாட்களாக தொடர்ந்து நடக்கும் வாகன விபத்துகளில், மக்கள் பலியாகும் சம்பவம், வாகன ஓட்டிகள், மற்றும் பயணிகளை அச்சுறுத்துகிறது.
வாகன ஓட்டிகள், அதிகாலை நேரத்தில், பனி மூட்டம் இருப்பதால், வாகனங்களை இயக்குவதை தவிர்ப்பதன் மூலம் விபத்துகளை தவிர்க்கலாம்.