சாலை விபத்துகளில் சிக்கியவர்களை காப்பாற்றுபவர்களுக்கான மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சாலை விபத்துளில் சிக்குபவர்களை காப்பாற்றுபவர்கள் போலீஸ் விசாரணை போன்ற பல விவகாரங்களில் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதற்கு சரியான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி இது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய அரசு உருவாக்கியிருந்தது. இந்த வழிகாட்டுதல்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கோபால் கெளடா தலைமையிலான அமர்வு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதில் சாலை விபத்துகளில் சிக்கியவர்களை காப்பாற்றியவர்கள் உடனடியாக அந்த இடத்தில் இருந்து செல்ல அனுமதிக்க வேண்டும். மருத்துவமனையில் சேர்த்தார்கள் என்றால் அவர்களிடன் எந்த கேள்விகளும் கேட்கப்பட கூடாது.
விபத்தில் இருந்து ஒருவரை காப்பாற்றியவர்களுக்கு தக்க சன்மானம் வழங்க வேண்டும். எந்த விதமான சிவில் அல்லது கிரிமினல் வழக்குகளோ பதிவு செய்யப்படக்கூடாது என்பன உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன.