Action to provide incentives to1 Makkalai Thedi Maruthuvam program volunteers : D.D. Health Pratap Kumar Info.

பெரம்பலூர் மாவட்ட சுகாதார அலுலவர் பிரதாப்குமார் தெரிவித்துள்ளதாவது:

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பெண் சுகாதார தன்னார்வலராக 95 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வீடுதோறும் சென்று தொற்றா நோய்களுக்கான முதற்கட்ட பரிசோதனைகள் செய்து, தொற்றா நோய் அறிகுறி உள்ள நபர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிந்துரை செய்வதுடன் பயனாளர்களுக்கு மாதாந்திர மருந்துகளையும் கொடுத்து வருகின்றனர்.

இந்த பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு ஏப்ரல் மாத ஊக்கத்தொகையினை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அவரவர் வங்கிக் கணக்கில் ஏப்ரல் மாதத்திற்கான ஊக்கத்தொகை செலுத்தப்பட்டுவிடும். இந்தத் தகவலானது அனைத்து பெண் தன்னார்வலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!