Activities for womens and children who have not registered, homes and Hostels: Perambalur Collector
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :
உரிய பதிவு இல்லாமல் பெண்கள் விடுதிகள், குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் தனியார் விடுதிகள் செயல்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும், அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனியார் விடுதிகள் மற்றும் தங்கும் இல்லங்கள் இவ்வறிவிப்பு வெளியிடப்படும் நாளிலிருந்து 15 நாட்களுக்குள் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.
எனவே, சம்மந்தப்பட்ட விடுதிகளின் உரிமையாளர்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் தங்கும் இல்லங்கள் (ஒழுங்குமுறை சட்டம்) 2014ன் கீழ் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்யாமல் நடத்தப்படும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் கண்டறியப்பட்டால் அரசு விதிமுறைகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்துள்ளார்.