Actor Bosevenkat campaigns in the streets in support of the Perambalur DMK candidates!
பெரம்பலூர் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் 11-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் எம்.அம்பிகா ராஜேந்திரன், 10- வது வார்டில் போட்டியிடும் ம.தி.மு.க.வேட்பாளர்
ஜெயசீலன், 7-வது வார்டு தி.மு.க.வேட்பாளர் ஷாலினி, 21-வது வார்டு தி.மு.க.வேட்பாளர் ராஜேந்திரன் மற்றும் 12-வது வார்டு தி.மு.க.வேட்பாளர் சசிஇன்பெண்டா ஆகியோர்களை ஆதரித்து நடிகர் போஸ்வெங்கட் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்தார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், நகர மாணவரணி அமைப்பாளர் ரினோபாஸ்டின் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.