Adding Hostel to the baby’s deaf and mouthless helpless neighbor near Namakkal
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் பஸ்ஸ்டாண்டில் ஆண்குழந்தை பெற்றெடுத்த காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ஆதவற்ற பெண்
விடுதியில் சேர்க்கப்பட்டார்.
கடந்த பத்து நாட்களுக்கு முன்னதாக புதுச்சத்திரம் பஸ்ஸ்டாண்டில் ஆண் குழந்தை பெற்றெடுத்த காதுகேளாத வாய்பேசாத ஆதரவற்ற பெண் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவ சிகிச்சை முடிந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தேவையான உதவிகள் செய்யுமாறு உத்திரவிட்டார்.
இதனையடுத்து கலெக்டரின் உத்திரவின்படி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ், அரசு தலைமை ஆஸ்பத்திரியின் ஆர்எம்ஓ கண்ணப்பன் அப்பெண்ணிற்கு போர்வைகள், துண்டு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
மேலும் மற்றுத்திறனாளி பெண்ணையும் அவரது ஆண் குழந்தையையும் நடமாடும் சிகிச்சை வாகனம் மூலம் அழைத்து சென்று ராசிபுரத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் அணைக்கும் கரங்கள் மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்புப்பள்ளியின் விடுதியில் சிறப்பு அனுமதியோடு சேர்க்கப்பட்டார்.
கைகளால் சைகை காட்டும் அப்பெண் தன்னோடு இருந்தவர் யார் என தெரியவில்லை என்றார். எழுத படிக்க தெரியாத்தால் உறவினர்பற்றி அறிய இயலவில்லை. திருமணமாகாத 30 வயது மதிக்கத்தக்க அப்பெண் உறவினர்கள் கண்டறிய போலீஸ் துறைக்கு கடிதம் அனுப்ப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கும் காது கேளாத வாய்பேசாத மாற்றுத்திறனாளி பெண் குறித்த தகவல் அனுப்பப்பட்டு உறவினர்கள் குறித்த விவரம் கேட்கப்பட்டுள்ளது. உறவினருடன் ஒப்படைக்கும் வரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு நிதி உதவி பெறும் இணைக்கும் கரங்கள் மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்புப்பள்ளியின் விடுதியில் உணவு தங்குமிடம் மருத்துவ வசதியுடன் பாதுகாக்கப்படுவார்.
இப்பெண் குறித்து தகவல் தெரிந்தால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் செயல்படும் மாற்றுத்திறனாளிகள் அலுலகத்தில் தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.