Adi-Dravida and Tribal Welfare School sports competition for students

பெரம்பலூர் : 2016-2017-ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கிடையேயான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் இன்று பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 10 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளைச் சார்ந்த 320 மாணவர்கள் 280 மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் குழுவிளையாட்டுப் போட்டிகளில் கோ-கோ, கபாடி, கையுந்துப்பந்து, வளையப்பந்து, எறிபந்து, இறகுப்பந்து, கால்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகளும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் 100மீ, 200மீ, 400மீ ஆகிய ஓட்டப் போட்டிகளும், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 400மீ தொடர் ஓட்டம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் 14 வயதிற்குட்பட்டோர், 17 வயதிற்குட்பட்டோர் மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவில் இருபாலருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

ஆண்களுக்கான 14-வயதிற்குட்பட்டோர் பிரிவில் 100 மீ, 200மீ மற்றும் 400மீ தொடர் ஓட்டப் போட்டியில் ஈச்சம்பட்டி ஆதிதிராவிடர் நலப் பள்ளியைச் சார்ந்த எம்.சின்னரசு, எஸ். பூபாலன் ஆகியோர் முதலிடத்தையும், 400 மீ ஓட்டப் போட்டியில் லாடபுரம் ஆதிதிராவிடர் பள்ளியைச் சேர்ந்த டி.சின்னதுரை என்பவர் முதலிடத்தையும், ஈட்டி எறிதல் போட்டியில் களரம்பட்டி ஆதிதிராவிடர் நலப் பள்ளியைச் சேர்ந்த ஜி.சுபாஸ் என்பவா; முதலிடத்தையும், குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டியில் பி. விக்ரம் முதலிடத்தையும், உயரம்தாண்டுதல் போட்டியில் ஒகளூர் ஆதிதிராவிடர் பள்ளியைச் சார்ந்த எம்.ஜெயந்த்மாதவன் முதலிடத்தையும், நீளம் தாண்டுதல் போட்டியில் மலையாளப்பட்டி ஆதிதிராவிடர் நலப் பள்ளியைச் சார்ந்த பி.பெருமாள் முதலிடத்தையும் பெற்றனர்.

ஆண்களுக்கான 17-வயதிற்குட்பட்டோர் பிரிவில் 100 மீ, ஓட்டப் போட்டி, ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் பாடாலூர் ஆதி திராவிடர் பள்ளியைச் சார்ந்த பி.சாந்தகுமார் முதலிடத்தையும், 200 மீ, ஓட்டப் போட்டியில் களரம்பட்டி ஆதிதிராவிடர் நலப் பள்ளியைச் சேர்ந்த எஸ்.பரத், 400 மீ ஓட்டப்போட்டியில் என்.அபினாஸ் ஆகியோர் முதலிடத்தையும்,

வட்டு எறிதல் போட்டியில் ஈச்சம்பட்டி ஆதிதிராவிடர் நலப் பள்ளியைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் முதலிடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் வி.நவநீதன் முதலிடத்தையும்,

உயரம்தாண்டுதல் போட்டியில் பாடாலூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியைச் சார்ந்த பி. சாந்தகுமார் முதலிடத்தையும், நீளம் தாண்டுதல் போட்டியில் மலையாளப்பட்டி ஆதிதிராவிடர் நலப்பள்ளியைச் சார்ந்த எஸ். நிஸாந்த் முதலிடத்தையும், 400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் ஒகளூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளியைச் சேர்ந்த பி.மணிமாறன் என்பவர் முதலிடத்தையும் பெற்றனர்.

ஆண்களுக்கான 19-வயதிற்குட்பட்டோர் பிரிவில் 100 மீ, 200மீ, 400மீ ஓட்டப் போட்டி, நீளம் தாண்டுதல் மற்றும் 400மீ தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் பி.பிரகாஸ் என்பவர் முதலிடத்தையும், உயரம் தாண்டுதல் போட்டியில் சி.ரஞ்சித்குமார் என்பவர் முதலிடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் பி.கார்த்திக் முதலிடத்தையும், வட்டு எறிதல் போட்டியில் எம்.சபரிநாத் முதலிடத்தையும், ஈட்டி எறிதல் டி.சேட்டு ஆகிய களரம்பட்டி ஆதிதிராவிடர் நலப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றனர்.

பெண்களுக்கான 14-வயதிற்குட்பட்டோர் பிரிவில் 100 மீ, 200மீ ஓட்டப்போட்டி, 400மீ தொடர் ஓட்டப் போட்டியில் நத்தக்காடு ஆதிதிராவிடர் நலப் பள்ளியைச் சேர்ந்த எஸ்.தனலட்சுமி, நீளம் தாண்டுதல் போட்டியில் ஆர். பிரியா ஆகியோர் முதலிடத்தையும்,

400 மீ ஓட்டப்போட்டியில் ஈச்சம்பட்டி பள்ளியைச் சேர்ந்த கே.காயத்ரி முதலிடத்தையும், உயரம் தாண்டுதல் வட்டு எறிதல் போட்டியில் பாடாலூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியைச் சார்ந்த எஸ்.கனிமொழி, எஸ்.பார்கவி முதலிடத்தையும் ஈட்டி எறிதல் குண்டு எறிதல் போட்டியில் ஒகளூர் பள்ளியைச் சார்ந்த பி.செல்வபாலினி முதலிடத்தையும் பெற்றனர்.

பெண்களுக்கான 17-வயதிற்குட்பட்டோர் பிரிவில் 100 மீ,ஓட்டம் 400மீ தொடர் ஓட்டப் போட்டியில் களரம்பட்டி ஆதிதிராவிடர் பள்ளியைச் சார்ந்த பி.முத்துலட்சுமி, எம்.கௌசிகா முதலிடத்தையும், 200 மீ, 400மீ ஓட்டப் போட்டியில் நத்தக்காடு ஆதிதிராவிடர் நலப் பள்ளியைச் சேர்ந்த சுமித்ரா முதலிடத்தையும்,

ஈட்டி எறிதல் போட்டியில் ஆலம்பாடி ஆதிதிராவிடர் நலப் பள்ளியைச் சேர்ந்த அ.வசந்தா முதலிடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் வட்டு எறிதல் போட்டியில் ஈச்சம்பட்டி ஆதிதிராவிடர் நலப்பள்ளியைச் சேர்ந்த எம்.ஜோதி, ஞானவிழி ஆகியோர் முதலிடத்தையும்,

உயரம்தாண்டுதல் போட்டியில் லாடபுரம் ஆதிதிராவிடர் நலப் பள்ளியைச் சேர்ந்த எம்.நிஸா முதலிடத்தையும், நீளம் தாண்டுதல் போட்டியில் ஒகளூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியைச் சார்ந்த அனிதா முதலிடத்தையும், பெற்றனர்.

பெண்களுக்கான 19-வயதிற்குட்பட்டோர் பிரிவில் 100 மீ ஓட்டப்போட்டி, உயரம் தாண்டுதல், வட்டு எறிதல் போட்டியில் அபிராமி முதலிடத்தையும், 200 மீ, 400மீ ஓட்டப்போட்டி, ஈட்டி எறிதல் போட்டியில் பி.சினேகா முதலிடத்தையும்,

குண்டு எறிதல் போட்டியில் சத்யா முதலிடத்தையும், நீளம் தாண்டுதல், 400மீ தொடர் ஓட்டப் போட்டியில் கே.பாரதி ஆகிய களரம்பட்டி ஆதிதிராவிடர் நலப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் முதலிடத்தையும் பெற்றனர்.

மாவட்ட அளவிலான இவ்விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். மேலும் மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் தடகளப் பயிற்றுநர் கோகிலா, நீச்சல் பயிற்றுநர் ந.அன்பரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!