Adi Dravidar, Tribal Youth Training for ACCOUNTS EXECUTIVE Job: Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தாட்கோ மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு தனியார் வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த நிறுவனங்களில் பணி புரிவதற்கு ஏதுவாக கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சியினை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது பெருகி வரும் வேலைவாய்ப்பு சந்தையில் வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தாட்கோ நிறுவனமானது புகழ் பெற்ற தனியார் வங்கியுடன் இணைந்து கணக்கு நிர்வாக (Accounts Executive) பணிக்கான பயிற்சியினை வழங்க உள்ளது.

இப்பயிற்சியில் சேர 22 முதல் 33 வயது வரை உள்ள ஆதிதிராவிடர் / பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு ( பி.ஏ, பி.காம், பி.எஸ்.சி. கணிதம்) முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

இப்பயிற்சி 20 நாட்கள் நடக்கும். மேலும், சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதிகள் மேற்கொள்ளப்படும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் பட்சத்தில் நிறுவனத்தால் நடத்தப்படும் பயிற்சி தேர்வுக்கு அனுமதிக்கப்படும். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வங்கி நிதி சேவை காப்பீடு BFSI – (Banking Financial Service Insurance) -ஆல் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், தனியார் வங்கி நிறுவனங்களில் கணக்கு நிர்வாக (Accounts Executive) பணியில் சேர பயிற்சி அளிக்கும் நிறுவனத்தால் வேலைவாய்ப்புக்கு வழிவகைச் செய்யப்படும். இப்பணியில் ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.25,000/- முதல் ரூ.30,000/- வரை பெறலாம். பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோ வழங்கும் என தாட்கோ மேலாண்மை இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!