பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தமிழ்செல்வன் வேப்பந்தட்டை பகுதியில் ஊர் ஊராக இரு சக்கர வாகனங்களில் பேரணியாக சென்று உச்ச கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார்.
பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தமிழ்செல்வன் ஏற்கெனவே வேப்பந்தட்டை வட்டத்தில் அனைத்து ஊர்களிலும் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களையும், சாதனைகளையும் எடுத்து கூறி தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
இந்நிலையில் தமிழ்செல்வன் இன்று காலை உச்ச கட்ட பிரச்சாரத்தை வேப்பந்தட்டையிலிருந்து இரு சக்கர வாகனங்கள் மூலம் பேரணியாக தொடங்கினார். இந்த பேரணி கிருஷ்ணாபுரம், வெண்பாவூர், பெரிய வடகரை, நெற்குணம், கை.களத்தூர், பசும்பலூர், வண்ணாரம்பூண்டி, வி.களத்தூர்,எறையூர், வாலிகண்டபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று அ.தி.மு.க அரசின் சாதனைகள் தொடரவும், தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கபட்டுள்ள அனைத்து சலுகைகளும் பொதுமக்களை சென்றடையவும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அப்போது வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர், சிவப்பிரகாசம், மாவட்ட அவைத் தலைவர் துரை, அமைப்பு சாரா ஓட்டுனரணி மாவட்ட செயலாளர் முத்துசாமி, மாவட்ட இணை செயலாளர் ராணி, ஒனறியக் குழு தலைவர் க.ஜெயலெட்சுமி , மகளிரணி மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரி உட்பட நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.