பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தமிழ்செல்வன் பெரம்பலூர் பகுதியில் ஊர் ஊராக இரு சக்கர வாகனங்களில் பேரணியாக சென்று உச்ச கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார்.
பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தமிழ்செல்வன் ஏற்கெனவே பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களையும், சாதனைகளையும் எடுத்து கூறி தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
இந்நிலையில், இரா. தமிழ்செல்வன் இன்று உச்ச கட்ட பிரச்சாரமாக பெரம்பலூரில் இருந்து இரு சக்கர வாகனங்கள் மூலம் பேரணியாக தொடங்கினார். இந்த பேரணி துறைமங்கலம், கல்பாடி, அகரம், சிறுவாச்சூர், வேலூர், சத்தரமனை, பொம்மனப்பாடி, அம்மாபாளையம், லாடபுரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு சென்று அ.தி.மு.க அரசின் சாதனைகள் தொடரவும், தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கபட்டுள்ள அனைத்து சலுகைகளும் பொதுமக்களை சென்றடையவும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அப்போது பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் மருதைராஜா, கவுல்பாளையம் ஊராட்சித் தலைவர் செல்வக்குமார் உட்பட நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.