admk-candidate-tamilselvan-perambalur பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் இரா.தமிழ்செல்வன் இன்று பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செங்குணம் கிராமத்தில் தனது பிரச்சாரத்தை துவங்கிய வேட்பாளர் இரா.தமிழ்செல்வன், செங்குணம், பாலம்பாடி, அருமடல், கல்பாடி, நெடுவாசல், எறையூர், அய்யலூர், அ.குடிக்காடு, எறையூர், நெடுவாசல், எறைய சமுத்திரம், உட்பட 10க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் வீதி, வீதியாக நடந்து சென்றும் பொது மக்கள் மற்றும் முதியவர்களை வணங்கியும் கும்பிட்டும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தின் போது, அதிமுக அரசின் 5 ஆண்டுகால சாதனைகளை விளக்கி பேசிய வேட்பாளர் :

பெ பொதுமக்கள் முன் வைத்த தனி தாலுகா, தொழிற்பயிற்சி கல்லூரி, ஆவின் குளிரூட்டு நிலையம், ஜவுளி பூங்கா, வெங்காய குளிர் பதன கிடங்கு, கல்லாறு நீர்த்தேக்கம், கல்லூரி மற்றும், ஆடை வடிவமைப்பு மையம், பால் குளிரூட்டும் நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாகவும்,

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தால் பொது மக்கள் முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் உடனுக்குடனே செய்து தருவதாக உறுதியளித்து தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த பிரச்சாரத்தின் போது ஒன்றிய சேர்மன் ஜெயக்குமார், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணை செயலாளர் கே.பி.ராமலிங்கம், சொக்கநாதபுரம் ராமஜெயம், ஆலம்பாடி கவுன்சிலர் குமார், லாடபுரம், கருணைராஜா, கவுள்பாளையும் ஊராட்சி மன்ற தலைவரும், இளம் பெண்கள் எழுச்சி பாசறை அமைப்பாளர் செல்வக்குமார், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராஜேஸ்வரி, ராணி கட்சி தொண்டர்கள், ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளருக்கு கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட அந்தந்த பகுதி பொது மக்கள் வெடி வெடித்தும், சால்வை அணிவித்தும், ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!