பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் இரா.தமிழ்ச்செல்வன் இன்று மாலை, பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம பகுதியில் அதிமுக கட்சியினருடன் தீவிர வாக்கும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
துறைமங்கலம், பகுதியில் உள்ள பங்களா ஸ்டாப், கே.கே நகர், 3 ரோடு, நியூ காலனி, 8 வார்டு, பள்ளிவாசல் தெரு, அவ்வையார் நகர், அரசு ஊழியர் குடியிருப்பு, வாசுகி தெரு, பெரியார் நகர், மின்நகர், சிலோன் காலனி, தீயணைப்பு மற்றும் காவலர் குடியிருப்பு பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரித்தார்.
முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், பெரம்பலூர் நகராட்சி தலைவர் ரமேஷ், பெரம்பலூர் அதிமுக நகர செயலாளர் பூபதி, சரவணன் உள்பட கிளை கழக பிரதிநிதிகள், மகளிர் அணியினர் ஆகியோர் பெரும் திராளாக கலந்து கொண்டு வீதிவீதியாக வாக்கு சேகரித்தனர். அப்போது கூட்டணி கட்சியை சேர்ந்த சமத்துவ மக்கள் கட்சி, மற்றும் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்தவர்களும் உடன் இருந்தனர்.
அப்போது 5 ஆண்டு ஆட்சி கால நலத்திட்டங்களையும், துறைமங்கலத்திற்கு துணை சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு பணிகளை எடுத்துக் கூறி வாக்குகள் சேகரித்தார்.