பெரம்பலூர்: பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வன் இன்று வேப்பந்தட்டை ஒன்றியத்தில் கட்சியினருடன் வாக்கு சேகரித்தார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அன்னமங்கலம், அரசலூர், ஈச்சங்காடு, முகமதுப்பட்டிணம், பிள்ளையார் பாளையம், கொட்டாரகுன்று, மலையாளப்பட்டி, பனம்பட்டி, புதூர், கவுண்டர்பாளையம், கோரையாறு, அய்யர்பாளையம், விஜயபுரம், தொண்டைமாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யக் கோரி தேர்தல் அறிக்கைகளை தெரிவித்து பிரச்சாரம் செய்தார். அப்போது வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் உள்பட கட்சியினர் பலர் இருந்தனர்.