Adolescent dies near Perambalur: Dead body recovered in rotten condition; Police investigation!
பெரம்பலூர் அருகே பட்டதாரி வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன், அழகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள பாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு- விஜயகுமாரி தம்பதியரின் மகன் சம்பத்குமார்(25),
பிஇ.,பொறியியல் பட்டதாரியான சம்பத்குமார் வேலை தேடி வந்தார்.
இதனிடையே கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் மகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தங்கராசு- விஜயகுமாரி தம்பதியினர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சம்பத்குமார் வசித்து வந்த வீட்டிலிருந்து இன்று துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த
தகவலின் பேரில், வி.களத்தூர் போலீசார் பாலையூர் கிராமத்திற்கு நேரில் சென்று வீட்டை திறந்து பார்த்த போது சம்பத்குமார் உடலின் பல்வேறு இடங்களில் காயங்களுடன் அழுகிய நிலையில், இறந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து சம்பத்குமாரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பத்குமார் கொலை செய்யப்பட்டாரா? கொலை செய்யப்படுவதற்கான காரணம் என்ன? கொலையாளி யார்? அல்லது தற்செயலாக இறந்து போனாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிற்குள் பட்டதாரி வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பாலையூர் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே, தனியான இருப்பவர்களை குறி வைத்த மர்ம ஆசாமிகள், இதே ஊராட்சிக்கு உட்பட்ட தொண்டப்பாடியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த முதியோவர்களான மாணிக்கம் – மாக்காயி தம்பதி இருவரையும் கடந்த 2023 ஜனவரி 31ம் தேதி கொடூரமாக இரட்டைக் கொலை செய்து நகை – பணத்தை கொள்ளையடித்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.