Advice for Teacher Test Writer

பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு-2017, 29.04.2017 அன்று தாள் -1 மற்றும் 30.04.2017 அன்று தாள் -2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய முழுமையான விபரம் மற்றும் தேர்வர்களுக்கான அறிவுரைகளை முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்துள்ளார்.

ஏப். 29 அன்று நடைபெறும் தாள் -1 – ற்கான தேர்வுகளை தனலெட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி, துறையூர் ரோடு, பெரம்பலூரில் 500 தேர்வர்களும், தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூரில் 500 தேர்வர்களும்,

தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, துறையூர் ரோடு, பெரம்பலூரில் 400 தேர்வர்களும், பனிமலர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூரில் 400 தேர்வர்களும், பனிமலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூரில் 400 தேர்வர்களும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, (மையம்-1) உப்போடை பெரம்பலூரில் 313 தேர்வர்களும் ஆக மொத்தம் 2,913 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர்.

30.04.2017 அன்று தாள் -2ற்கான – தேர்வுகளை தனலெட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி, துறையூர் ரோடு, பெரம்பலூரில் 600 தேர்வர்களும், தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூரில் 600 தேர்வர்களும், ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி, மேலமாத்தூரில் 520 தேர்வர்களும், தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, துறையூர் ரோடு, பெரம்பலூரில் 420 தேர்வர்களும், அரசு மேல்நிலைப்பள்ளி, குன்னத்தில் 400 தேர்வர்களும், அரசு மேல்நிலைப்பள்ளி, குரும்பலூரில் 400 தேர்வர்களும், அரசு மேல்நிலைப்பள்ளி, துறையூர் ரோடு, பெரம்பலூரில் 400 தேர்வர்களும்,

பனிமலர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூரில் 400 தேர்வர்களும், பனிமலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூரில் 420 தேர்வர்களும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, (மையம்-1) உப்போடை பெரம்பலூரில் 400 தேர்வர்களும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூரில் (மையம் 2) 400 தேர்வர்களும், ஸ்ரீ சாரதாதேவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூரில் 420 தேர்வர்களும்,

புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூரில் 400 தேர்வர்களும், ரோவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூரில் 411 தேர்வர்களும், கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூரில் 300 தேர்வர்களும், அரசு மேல்நிலைப்பள்ளி, வேப்பந்தட்டையில் 300 தேர்வர்களும், அரசு மேல்நிலைப்பள்ளி, எசனையில் 300 தேர்வர்களும், அரசு மேல்நிலைப்பள்ளி, பாடாலூரில் 300 தேர்வர்களும், அரசு மேல்நிலைப்பள்ளி, சிறுவாச்சூரில் 300 தேர்வர்களும், செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூரில் 300 தேர்வர்களும், அரசு மேல்நிலைப்பள்ளி, வாலிகண்டபுரத்தில் 300 தேர்வர்களும், அரசு மேல்நிலைப்பள்ளி, செட்டிகுளத்தில் 400 தேர்வர்களும், அரசு மேல்நிலைப்பள்ளி, வேப்பூரில் 400 தேர்வர்களும் ஆக மொத்தம் 9,091 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர்.

மேலும், மேற்கண்ட தேர்வுகளை எழுதவுள்ள தேர்வர்கள் மையத்திற்கு;காலை 08.30 மணிக்கு வருகை தர வேண்டும். அதனை தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை தேர்வு மைய நுழைவாயிலில் காவலர் சோதனை நடைபெறும்.

தேர்வறைக்குள் நுழைவுச்சீட்டு மற்றும் நீலம் அல்லது கருப்பு பந்து முனைப் பேனா மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர். தேர்வு நடைபெறும் வேளையில் தேர்வர்கள் வெளியில் செல்ல அனுமதியில்லை. தேர்வு முடிந்ததும் OMR விடைத்தாளின் பிரதியை (கார்பன் காப்பி) தேர்வர் பெற்றுச் செல்ல வேண்டும்.

மேலும் அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட தாள்கள் எவற்றையும் தேர்வு அறைக்குள் வைத்திருக்க அனுமதியில்லை. கைபேசி, கைக்கணினி, மடிக்கணினி, தரவி அல்லது கணக்கிடும் கருவிகள் போன்றவற்றை இத்தேர்வறைக்குள் வைத்திருக்க அனுமதியில்லை.

தேர்வறைக்குள் அறைக்கண்காணிப்பாளர் அல்லது சக தேர்வர் ஆகியோருடன் முறை தவறி நடப்பவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்கண்ட அறிவுரைகளைப் பின்பற்றாத தேர்வர்கள் அன்றையத் தேர்வினைத் தொடர்ந்து எழுத அனுமதிக்கப்படாததோடு, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளைத் தொடர்ந்து எழுத நிரந்தர தடை விதிக்கப்படுவதுடன் காவல் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!