பெரம்பலூர் : விதிமுறைகளை மீறும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத் திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் 350க்கும் மேற்பட்டோர் நேற்று 13ந்தேதி முதல் வரும் 17ந்தேதி வரை கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட வக்கீல்கள் சங்கத்தின் நிர்வாக்குழுவின் அவசர கூட்டம், மாவட்டத் தலைவர் வள்ளுவன்நம்பி தலைமையில் நடந்த கூட்டத்தில்,
சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த சட்ட திருத்தம் வழக்கறிஞர்களின் சுதந்திரத்தையும், உரிமையையும், தொழிலையும்,பாதிக்கும் வகையில் உள்ளதாகவும் அதனை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தியும் இன்று 13ந்தேதி தொடங்கி வரும் 17-ந்தேதி வரை நான்கு நாட்கள் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.
அதன் படி இன்று 3 வது நாளாக நீதி மன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த 350க்கும் மேற்பட்டோர் நீதி மன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.