இந்திய தேர்தல் ஆணையயம் வெளியிட்டுள்ள உத்தரவு 15.5.2016 மற்றும் 16.5.2016 ஆகிய நாட்களில் செய்தித்தாள்களில் வரும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களுக்கு மாவட்ட ஊடக கண்காணிப்பு மற்றும் சான்றளிப்பு குழுவிடம் உரிய அனுமதி பெறவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எனவே 15.5.2016 மற்றும் 16.5.2016 ஆகிய தேதிகளில் தங்கள் பத்திரிக்கையில் விளம்பரங்கள் வெளியிட விரும்பும்அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் மாவட்ட ஊடக கண்காணிப்பு மற்றும் சான்றளிப்பு குழுவிடம் உரிய அனுமதி பெற்று வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வெளியிடப்படும் விளம்பரங்களில் கண்டிப்பாக ஊடக கண்காணிப்பு மற்றும் சான்றளிப்பு குழு வழங்கும் அனுமதி எண் இடம்பெற வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது