After 100 years, Poolampadi Dharmaraja – Draupadi Amman Temple consecrate , led by ‘DATO. PRAKADEESH KUMAR MD., PLUS MAX Group of Companies: About 30 thousand people participated.

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பேரூரில், சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மானம் செய்யப்பட்ட தர்மராஜா – திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, குடமுழுக்கு விழா செய்யப்பட்டது. அதன் பின்னர், கோவில் போதுமான பாராமரிப்பு பணிகள் இல்லாமல், சிதிலமடைந்து வந்தது. இதனை தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி கோவிலை சீரமைக்க முடிவு செய்தனர்.

அதன் பிறகு, தொழிலதிபர் டத்தோ.பிரகதீஷ் குமார் பெருமளவு நிதி உதவியுடன் திரவுபதி அம்மன் கோவில், ராஜகோபுரம், செல்வ விநாயகர் கோவில், தர்மராஜா சுவாமி கோவில், ஸ்ரீ அரவான் சுவாமி கோவில், போத்த ராஜா சுவாமி கோவில், கிருஷ்ணர் கோவில், பலி பீடம் மற்றும் கொடி மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வேலைபாடுகளுடன் கோவில் திருப்பணிகள் நடைபெற்றது.

ஜுலை 6ந் தேதி இன்று புதன்கிழமை அதிகாலை 4 ம் கால பூஜை, பூர்ணாஹூதி, கும்பங்கள் புறப்பாடு ஆகியவைகள் நடந்தது. தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேக புனிதநீர் ஊற்றும் நிகழ்ச்சி இன்று காலை சுமார் 7 மணி அளவில் தொழிலதிபர் பிரகதீஷ் குமார் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு தீப ஆராதனையும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது.

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பூலாம்பாடி பகுதியில் 6 இடங்களில் அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை தொழிலதிபர் பிரகதீஷ் குமார் மற்றும் கிராம பொதுமக்கள், கோவலில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

குடமுழுக்கு விழா கூட்டத்தின் ஒரு பகுதி

இந்த கும்பாபிஷேகத்தை காண பெரம்பலூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, மாவட்டங்களை சேர்ந்த சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், எம்.எல்.ஏ.க்கள் பிரபாகரன் (பெரம்பலூர்), ராஜேந்திரன் (பரமத்தி), மற்றும் முன்னதாக ரோவர் கல்வி நிறுவனங்களின் வைஸ் சேர்மன் ஜான் அசோக் வரதராஜன், ராமக்கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்பிரமணியன், திமுக பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் என்.ராஜேந்திரன், முன்னாள் ஆவின் தலைவர் திருச்சி கார்த்திக், மலேசியா தொழிலதிபர் துரைசிங்கம், மலேசியா தொழிலதிபர் தத்தோ.மணிவாசகம், மலேசியா தொழில் அதிபர் தத்துவம் நீலா ராஜன், மலேசியா தொழிலதிபர் சுந்தர், தமிழக விஐபி உரிமையாளர் ராஜா, மலேசியா சென்னை சில்க்ஸ் உரிமையாளர் சேகர், மலேசியா பூச்சந்திரன் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள், கிராம மக்களின் உறவினர்கள், நண்பர்கள் என குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டனர்.

இன்று பூலாம்பாடி கிராமமே, திருவிழாக் கோலம் கொண்டிருந்தது. பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி, மற்றும் துணைத் தலைவர் செல்வலட்சுமி, மற்றுமு வார்டு உறுப்பினர், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் நல்லத்தம்பி, முன்னாள் ஒன்றிய செயலாளர் சு.தங்கராசு மற்றும் திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக பாஜக பிரமுகர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

தொழில் துறையிலோ, அல்லது அரசியலிலோ முன்னேறியவர்கள், சொந்த ஊரை அல்லது நாட்டை மறந்து, வெளிநாடுகளில் செட்டில் ஆவது வழக்கம். ஆனால், பன்னாட்டு தொழிலதிபர் தனது சொந்த ஊரிலேயே வீடு கட்டி வசித்து வருவதோடு, குலத்தொழிலான விவசாயத்தையும் தொடர்ந்து செய்து வருகிறார். தன்னோடு ஊரும், ஊர் மக்களும் முன்னேற வேண்டும் என டத்தோ.பிரதீஸ்குமாரின் முன்னெடுப்புகள் பூலாம்பாடி மட்டுமல்லாது தமிழக மக்களுக்கும் முன்னூதாரணமாக திகழ்கிறார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!