After breaking the lock of grocery store in Perambalur, 3rd robbery in 6 months!
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் ஔவையார் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் வைத்தியலிங்கம் (41). இவர், துறைமங்கலம் 3 ரோடு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
நேற்றிரவு வியாபாரத்தை முடிந்தவுடன், கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில், மளிகைக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது இன்று அதிகாலை தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற பெரம்பலூர் போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 800 பணம் மற்றும் சுமார் ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள மளிகைப் பொருட்களை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கடந்த 6 மாதங்களில் தற்போது நடந்த திருட்டு 3 ஆவது முறை என்பது குறிப்பிடதக்கது.
விளம்பரம்: