உரிய அனுமதி பெற்ற பிறகே அரசியல் கட்சியினர், தேர்தல் விளம்பரங்களை உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியிட வேண்டும் – தேர்தல் நடத்தும் அலுவலர்
இது குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நந்தக்குமார் தெரிவித்துள்ளதாவது:
வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்டுள்ள தேர்தல் விதிமுறைகள் யாவும் மாவட்டம் முழுவதும் அமல்படுத்தப்படுள்ளது.
அதன்படி சுவர்களில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அளிக்கப்பட்டுவருகின்றன.
மேலும் அரசியல் கட்சியினர் தாங்கள் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களை மாவட்ட நிர்வாகத்தால் அடையாளம் காணப்பட்ட 17 இடங்களில் மட்டுமே முன் அனுமதி பெற்று நடத்திட வேண்டும்.
அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் விளம்பரங்களை உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்துவதற்கு முன்பாக ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவிடம் தடையின்மை சான்று பெற்றிருக்க வேண்டும்.
அவ்வாறு தடையின்மை சான்று பெறாமல் உள்ளூர் தொலைகாட்சிகளில் விளம்பரங்கள் ஒளிப்பரப்பு செய்யப்பட்டால், அக்கட்சியினர் மீதும், தொடர்புடைய தொலைகாட்சி நிறுவனங்கள் மீதும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இக்குழுவிற்கான தலைவராக மாவட்ட தேர்தல் அலுவலரும், உறுப்பினர்களாக வருவாய் கோட்டாட்சியர், தேசிய தகவல் மைய அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் தூர்தஷன் தொலைக்காட்சி செய்தியாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் தொலைக் காட்சிகளில் ஒளிப்பரப்படும் அரசியல் கட்சியினரின் தேர்தல் விளம்பரங்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக கண்கானிப்பு அறையில் தொடர;ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.
இக்குழுவினர் தொலைக் காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள் நாள் ஒன்றுக்கு எத்தனை முறை, எத்தனை சேனல்களில் ஒளிப்பரப்பாகிறது என்பதை கண்காணித்து அதன் தகவல்களை தேர்தல் செலவினக்குழுவினருக்கு அனுப்புவர். அவர்கள் இந்த தகவல்களை தொகுத்து அதன் விபரங்களை சம்மந்தப்பட்ட வேட்பாளரின் தேர்தல் கணக்கில் பற்று வைக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.