After the approval, the poster, wall writting and flex banners should be kept: Perambalur Police Department Notice

பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் கண்காணிப்பாளர் திசாமித்தல் வெளியிட்டுள்ள அறிவிப்பு :

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்து மற்றும் பொது மக்கள் நடமாட்டத்தை கருத்தில் கொண்டும், சட்டம், ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும்,

பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து கிராம பகுதிகள் மற்றும் பெரம்பலூர் நகரப் பகுதிகளிலும் விளம்பர பேனர்கள் (Flex Banner) , தட்டிகள் (Cut Out), சுவர் விளம்பரம் (Wall Writing ) மற்றும் சுவடிராட்ழகள் (Poster) ஒட்டுவதற்கு உரிய அனுமதி பெற அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வகையான விளம்பர பேனர்கள், தட்டிகள் வைப்பதால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. மேலும், அவ்வாறு பேனர்கள் வைக்க நேரிட்டால் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே வைக்க வெண்டும்.

அனுமதி பெற்ற நாட்களுக்கு மேல் பேனர்களை வைத்திருக்க கூடாது. மேலும், ஒவ்வாரு விளம்பர பேனர்கள், தட்டிகள் மற்றும் சுவடரொட்டிகளில் கட்டாயம் அரசு அனுமதி எண்ணை குறிப்பிட்டிருக்க வேண்டும். மேலும் சுவர்களில் விளம்பரம் செய்பவர்கள் கட்டாயம் அதன் உரிமையாளரிடம் அனுமதி பெற்ற பின்னரே பயன்படுத்த வெண்டும்.

மேற்கண்ட உத்தரவுகளை மீறும் நபர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனுமதி பெறாமல் வைக்கப்படும் பேனர்கள் முறையாக அகற்றப்படும் எனவும், பெரம்பலூர் மாவட்ட காவல் துறை அலுவலக செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!