Again application to school students classroom building near in Perambalur the district collector

பெரம்பலூர் அருகே பள்ளிக் கூட வகுப்பறை கட்டடம் வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் கோரிக்கை மனு கொடுத்தனர்.

பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி கிராமத்தில் கடந்த 4 ஆண்டு நடுநிலைப்பள்ளியாக இருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 160 மாணவர்களுடன் இயங்கி வருகிறது.

இந்தப் பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு உரிய அடிப்படை வசதிகள் இல்லை. வகுப்பறை கட்டடங்கள் இல்லை. மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து தான் பயின்று வருகின்றனர். வகுப்புகள் மரத்தடியில் நடந்து கொண்டிருக்கும் போது இலைகள், பூச்சிகள், வாகனங்கள் ஹார்ண் உள்ளிட்டவைகளால் மாணவரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அமைந்து விடுகிறது.

மேலும், மழை மற்றும் வெயிற் காலங்களிலும், காற்று வீசும் போது உண்டாகும் புழுதியாலும் மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல முறை அதிகாரிகளிடம், மக்கள் பிரதிநிதிகளிடமும் பல முறை கோரிக்கையை மனுவாக கொடுத்துள்ளனர்.

ஆனால், இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண்டும் இது குறித்து அந்த மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இதே போன்று மாவட்டத்தின் பல பகுதிகளில் பிரச்சனைகள் உள்ளன. ஆனால், மாவட்ட ஆட்சியரோ அவரது ஆட்சியர் மாளிகையில் பொழுது போக்கிற்காக 50 லட்சம் மதிப்பில் பூங்கா மற்றும் வளாகம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!