Agents on the Milk association, police reported today on Actor Simbu “
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் சு.ஆ.பொன்னுசாமி தலைமையில் பால் முகவர்கள் காவல் துறையில் கொடுத்துள்ள புகார்:
“கட்அவுட்களுக்கு அண்டா, அண்டாவாக பாலாபிஷேகம் செய்யுங்கள்” என ரசிகர்களை உசுப்பேற்றி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் பேசி காணொளி வெளியிட்ட நடிகர் சிம்பு மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரியும், கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்ய நிரந்தரமாக தடை விதிக்க கோரியும்…,
“வந்தா ராஜாவா வருவேன்” திரைப்படம் வெளியாகும் நாளில் பால் முகவர்களின் கடைகளில் இருந்து பால் திருடு போகாமல் தடுக்க காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரியும்…
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனரும், மாநில தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி, மற்றும் மாநில பொதுச்செயலாளர் எஸ்.பொன்மாரியப்பன், மாநில இணைச் செயலாளர்கள் எம்.சக்திவேல், எஸ்.வெங்கடேசபெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று பிற்பகல் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.