Agriculture officials request help eliminate wage disparity

ஒரே பதவி நிலையி்ல் பணியாற்றுபவர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என உதவி வேளாண்மை அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ந.சேகர் தலைமையில் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. செயலர் கே.ஏ.சிவக்குமார், பொருளாளர் பி.மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ரா.அருள், முன்னாள் தலைவர் இசக்கிமுத்து ஆகியோர் பேசினர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பணி குறித்து தோட்டக்கலை இயக்குநர் மாதம்தோறும் செயல்திறன் அறிக்கை கோருவதை கைவிட வேண்டும். உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், உதவி விதை அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்கள், துணை தோட்டக்கலை அலுவலர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்.

2009 இல் பணியில் சேர்ந்த உதவி வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்களுக்கும், இதே பணியிடத்தில் 2010, 2011 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்தவர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். வேளாண்மைத்துறையில் உள்ளதுபோல் பயிர் அறுவடை பரிசோதனை தற்காலிக பணியாளர்களை தோட்டக்கலைத்துறையிலும் வழங்க வேண்டும். வேளாண்மைத்துறையில் கூடுதல் எண்ணிக்கையில் பயிர் அறுவடை பரிசோதகர்களை நியமிக்க வேண்டும்.

தோட்டக்கலைத்துறை பண்ணைகளில் வழங்கப்படும் பழக்கன்றுகளை தரமானதாக வழங்க வேண்டும். பிரதமரின் பயிர்காப்பீட்டு திட்டப் பணிகளை மேற்கொள்ள வட்டாரத்திற்கு ஒரு உதவி வேளாண்மை அலுவலர் பணியிடத்தை உருவாக்க வேண்டும்.

வேளாண் வணிக துறையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் செயல்படும் குளிர்சாதன அறைகளுக்கு உதவி வேளாண்மை அலுவலர்களின் ஊதியத்தில் வாடகை செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும்.

சிறப்பாக பணியாற்றும் உதவி, துணை வேளாண்மை, தோட்டக்கலை, விதை அலுவலர்களை கௌரவப்படுத்தி குடியரசு தின விழாவில் சான்றிதழ் வழங்க வேண்டும். பயிர்காப்பீட்டு திட்டத்தில் உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்வதை கைவிட வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்திற்கு என தனியாக காப்பீட்டு நிறுவனத்தை தொடங்க வேண்டும்.

உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையடக்க கணனி பழுதடைந்துள்ளதால், அதனை திரும்ப பெற்றுக்கொண்டு புதிதாக மடிக்கணினி, இணையதள வசதியுடன் வழங்க வேண்டும்.

விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகளை ரூ.2,000-க்கு குறையாமல் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். ரூ.100-க்கு கூட இப்போது நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.

விதை சுத்திகரிப்பு பணி, சான்று அட்டை பெருத்தும் பணிக்கு கூலியாக கடந்த 18 ஆண்டுகளாகவே கிலோவிற்கு 60 பைசா மட்டுமே வழங்கப்படுகிறது.

இதனால் இந்த குறைந்த கூலிக்கு பணியாளர்கள் கிடைப்பதில்லை. இதனால் இந்த தொகையை கி்லோவிற்கு ரூ.3 என உயர்த்தி வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!