Ahead of New Year, Cake Festival by Aswins in Perambalur: Starts Today!
பெரம்பலூர் அஸ்வின்ஸ் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு 3 நாட்கள் நடைபெறும் கேக்திருவிழா கோலாகலமாக இன்று தொடங்கியது.
பெரம்பலூர் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் சார்பில் வருடந்தோறும் புத்தாண்டை முன்னிட்டு கேக்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 2023 புத்தாண்டை வரவேற்கும் விதமாக 3 நாள் கேக் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம் அஸ்வின்ஸ் பார்ட்டி ஹாலில் டிசம்பர் 30,31மற்றும் ஜனவரி1 ஆகிய மூன்று நாட்கள் இந்த கேக்திருவிழா நடைபெறுகிறது.
கேக்திருவிழாவின் ஒருபகுதியாக டிசம்பர் 31 மாலை 4 மணிமுதல் இரவு 9 மணிவரை மேஜிக் ஷோவும் நடைபெறுகிறது. சின்னத்திரை புகழ் மெஜிசியன் மோகன் கலந்துகொண்டு மேஜிக் செய்து காண்பிக்க உள்ளார். மேலும், சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டி டிசம்பர் 30,31ஆகிய 2நாட்கள் நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து சிறுவர் சிறுமிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
கேக்திருவிழாவிற்கான தொடக்க விழா அஸ்வின்ஸ் குழுமத் தலைவர் கே.ஆர்.வி. கணேசன் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி கேக் திருவிழாவை தொடங்கி வைத்தார். அஸ்வின்ஸ் இயக்குனர்கள் செல்வக்குமாரி கணேசன், அஸ்வின், சிபி, நிஷாசிபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வள்ளலார் குழுமங்கள் நிறுவனர் அரவிந்தன், ரெட்கிராஸ் ஜெயராமன், ரோட்டரி கவர்னரும், பாரத் நிறுவனங்களின் உரிமையாளர் கார்த்திக், ஆதவ் ஸ்கூல் தாளாளர் ராஜேந்திரன், முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ், மாருதி எலக்ட்ரானிக்ஸ் ரமேஷ், தம்பு டீ ஸ்டால் பாலாஜி, மரகதம் சரவணண், எஸ்ஆர்டி பஸ் உரிமையாளர் செந்தாமரைகண்ணன் ,மூத்த வழக்கறிஞர் பாபு, செந்தூர் மெடிக்கல் சுகுமார்,பகவதி ஹோட்டல் கணேசன், மாகாலட்சுமி சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சிவராமன், பொறியாளர்கள் சிவராஜ், மோகன்ராஜ் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அஸ்வின்ஸ் மேலாளர் சுரேஷ், நேர்முக உதவியாளர் சூரி என்கிற வெங்கடேசன், ஹெச்ஆர் சரவணண் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
விளம்பரம்: