AIADMK 50th Anniversary, Golden Jubilee; Volunteers RTR led party celebration in Perambalur with vibrancy!

கடந்த 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி அ.இ.அ.திமுக. பல்வேறு இன்னல்களை எதிர்க் கொண்ட கட்சி, குடும்ப ஆட்சி இல்லாமல், கொள்கை வாரிசுகளை வைத்து ஜனநாயக முறையில், ஏழை எளியவர்களும் அனைத்து பதவிகளையும், அரசியலில் பெறலாம். பதவி பெற பணம் தேவையில்லை, கொள்கையும், உழைப்பும் கொண்டவர்களுக்கு வாய்ப்புகளை அள்ளி தரும் கட்சி. பல வாழ வைத்த கட்சி. குறுநில மன்னர்கள் இல்லா கட்சி. ஒரே பதவியில் பல ஆண்டுகள் ஒருவரே இல்லாத கட்சி என்ற பெருமை அதிமுக விற்கு உண்டு. இன்றைய தினம் 50 ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏவும், அக்கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், கட்சி கொடியை ஏற்றப்பட்டது. பின்னர், அங்கு அலங்கரிக்கபட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி கட்சியினர் மரியாதை செலுத்தி, அதிமுக வாழ்க என கோசமிட்டனர். அங்கிருந்தவர்களுக்கு இனிப்பு உருண்டைகள் வழங்கப்பட்டது. முன்னதாக அதிர்வேட்டுகள் முழங்கின. இதில், முன்னாள் எம்.எல்.ஏ இளம்பை இரா.தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள்

என்.கே. கர்ணன், கிருஷ்ணசாமி, சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன். சசிக்குமார், செல்வமணி, செந்துறை ரமேஷ், சந்திரகாசன், செல்வக்குமார் மற்றும் பேரூர் ரெங்கராஜ், செல்வராஜ், வினோத், ஆசாத், இணைச் செயலாளர் ராணி, துணைச் செயலாளர் கு.லட்சுமி, மகளிரணி ராஜேஸ்வரி, மாவட்ட விவசாய பிரிவு லாடபுரம் கருணாநிதி, மாவட்ட சிறுபான்மை பிரிவு ஜமால்முகமது, மாவட்ட தொழில் நுட்ப பிரிவு செயலாளர் பெருமாள், ஆலத்தூர் ஒன்றிய பேரவை செயலாளரும், ஜெமீன்ஆத்தூர் ஊராட்சித் தலைவருமான ஜி.சண்முகம், ஒன்றிப் பேரவை இணைச்செயலாளரும், கீழமாத்தூர் ஊராட்சித் தலைவருமான கே.பி.ராஜேந்திரன், ஒன்றியப் பேரவை இணைச் செயலாளரும், தொண்டப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான டி.செல்வராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், சாத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான சி.நாகராஜன், மாவட்ட மாணவரணி துணைத்தலைவரும், நிலவளவங்கி இயக்குனருமான என்.ராஜ்குமார், புஜங்கராயநல்லூர் எஸ்.செந்தில்குமார், ஒன்றிய பொறுப்பாளர் எசனை பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர். கிராமங்கள்தோறும், கட்சி கொடிகள் ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட, அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து, தலா ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கி மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் கவுரப்படுத்தினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!