AIADMK candidate collects votes at DMK A.Raja’s house!
- பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளராக மூன்றாவது முறையாக போட்டியிடும் இளம்பை ஆர்.தமிழ்ச்செல்வன் இன்று பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெங்கநாதபுரம், தம்பிரான்பட்டி, கீழக்கணவாய், புதுவேலூர், வேலூர், சத்திமனை, களரம்பட்டி, அம்மாபாளையம், லாடபுரம், மேலப்புலியூர், நாவலூர், திருப்பெயர், ஆலம்பாடி, சொக்கநாதபுரம், செஞ்சேரி ஆகிய பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில், பாமக, பாஜக, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், உள்ளிட்ட கட்சிகளில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை வேலூரில் கோயிலில் சாமி கும்பிட்டு மேளதாளங்கள் வேட்டுக்கள் முழங்க வீதி வீதியாக பொதுக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து சென்று கொண்டிருந்த போது அங்கே திமுக மாநில கொள்கை பரப்பு செயலாளரும், எம்.பியுமான ஆ.இராசாவின் வீடு வந்தது. அப்போது அங்கே சென்ற வேட்பாளர் ஆ.இராசாவின் அண்ணன் கலியபெருமாள் அங்கிருந்தார். அவரிடம், அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் மரியாதை நிமித்தமாக தனக்கு வாக்களிக்கும்படி அவருக்கு பொன்னாடை போர்த்தி வணக்கம் தெரிவித்து வாக்குகள் சேகரித்தார். மரியாதையை ஏற்றுக் கொண்ட கலியபெருமாள் வேட்பாளர் தமிழ்ச்செல்வனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். எதிரெதிர் கட்சியினரிடையே ஏற்பட்ட இச்சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், பாமக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் பின்னர் கலியபெருமாளை சந்தித்து பரஸ்பர வணக்கம் தெரிவித்து அடுத்த வீட்டை நோக்கி வாக்குகளை சேகரிக்க சென்றனர். இதனால், அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக பெரம்பலூர் போலீசார் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.