AIADMK candidate Tamilselvan collects votes in Perambalur municipality!
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் தீவிர வாக்குகள் சேகரித்தார். அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள் அனைத்தையும் எடுத்துரை ஆங்காங்கே வாக்குகள் சேகரிக்கிறார். பெரம்பலூர் நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி, முன்னாள் எம்.பி. சந்திரகாசி, உள்ளிட்ட வார்டு செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர், உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். அதிமுகவின் சாதனைகளை எடுத்துரைத்தும், தேர்தலி அறிக்கையை எடுத்துரைத்தும் வாக்குகளை சேகரித்தார். கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.
நேற்று முன்தினம், எசனை, கீழக்கரை, சோமண்டாபுதூர் வடக்குமாதவி, எளம்பலூர் ஊராட்சிகளில், கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.