AIADMK candidates contesting in Perambalur municipality
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
பெரம்பலூர் நகராட்சியில் பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை உள்ளடங்கியப் பகுதிகளில் 21 வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதில் 1, 2, 3, 4, 7, 11, 12, 18 ஆகிய வார்டுகள் பெண்கள் (பொது) 5, 10, 13, 14, 15, 17, 21 ஆகிய வார்டுகள் (பொது), 6, 8, 20 ஆகிய வார்டுகள் எஸ்சி (பொது), 9, 16, 19 எஸ்சி (பெண்கள்) என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளிலும் அதிமுகவே போட்டியிடுகிறது. போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
வேட்பாளர் பட்டியல் : 1 வது வார்டு- பாத்திமா பீபி, 2வது வார்டு – சுஜாதா, 3வது வார்டு – லதா, 4வது வார்டு- சாந்தி, 5 வது வார்டு- புவேந்திரன், 6 வது வார்டு- பிரபாகரன், 7வது வார்டு- வேம்பு, 8 வது வார்டு- ராமையா, 9 வது வார்டு- காயத்ரி,
10 வது வார்டு- சரவணன், 11வது வார்டு- ஜெயந்தி, 12வது வார்டு- பரமேஸ்வரி, 13வது வார்டு- செல்வக்குமார், 14வது வார்டு- ஜெயராஜ், 15வது வார்டு- திலீப்குமார், 16வது வார்டு- தனமணி, 17வது வார்டு- காமராஜ், 18 வதுவார்டு- லெட்சுமி, 19 வது வார்டு- கீர்த்திகா, 20 வது வார்டு- முரளிதரன், 21வது வார்டு- பழனிசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்