AIADMK Committee for Polling Agents Consultative Meeting Led by RT Ramachandran MLA in Perambalur!

பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், குன்னம் ஆகிய இரு சட்ட மன்ற தொகுதிகளுக்கான அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் மாவட்டம் செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் பெரம்பலூரில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: கட்சியின் முக்கிய பொறுப்பு வாக்குச்சாவடி முகவர்களுக்குதான் உள்ளது. பரஸ்பரத்துடன் ஒருவரை ஒருவர் அனுசரித்து பொறுமையுடன் பணிபுரிந்து வெற்றி ஒன்றே இலக்காக கொண்டு, இரட்டை இலை சின்னத்தை பெரம்பலூர், குன்னம் தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய பாடுபடவேண்டும், அம்மாவின் ஆட்சியை மீண்டும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கொண்டு வர அயராது கட்சியின் அனைத்து தரப்பினரும், ஈகோ இல்லாமால் போட்டி போட்டு உழைக்க வேண்டும். கட்சியின் செயல்முறைகள், அறிவிப்புகளை ஏற்று சாதுர்யமாக பணி செய்ய வேண்டும், அதற்கு அனைவருக்கும் ஒத்துழைப்பு வழங்கி அனைவரும் பாடுபடுவோம் என ஆலோசனை வழங்கினார். பின்னர், கூட்டத்தில், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, வேப்பந்தட்டை முன்னாள் ஒன்றிய செயலாளர் பூவராகசாமி உள்ளிட்ட பலர் ஆலோசனைகள் வழங்கினர். கூட்டத்தில் திமுக மக்கள் கிராம சபை நடத்திய ஊர்களில் அதிமுக சார்பில் அதிமுக சாதனை குறித்த கூட்டங்களை நடத்த முடிவுகள் செய்யப்பட்டது.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், கிருஷ்ணசாமி, சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன், செல்வக்குமார், , செல்வமணி, சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர்கள் செல்வராஜ், வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி வரவேற்றார். கூட்டத்தில் பெரம்பலூர் எம்.எல்.ஏவும், மாவட்ட மாணவரணி செயலாளருமான ஆர். தமிழ்ச்செல்வன், மாநில மீனவர் அணி இணைச் செயலாளர் பி.தேவராஜன், மாவட்ட இணைச் செயலாளர் ராணி, மாவட்ட துணைச்செயலாளர் கு.லெட்சுமி, மாவட்ட மகளிரணி செயலாளர் க.ராஜேஸ்வரி, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு அணிச் செயலாளர்கள், இளைஞர் -இளம்பெண்கள் பாசறை பொறுப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணியினர் என பெரும் திரளாக கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!