AIADMK executives meeting on Kurumbalur Town Panchyat local Body election!
பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூர் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் பாளையத்தில் நடந்தது. பேரூர் செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட மாணவரணி செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தேர்தலில் பணியாற்றுவது குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.. கூட்டத்தில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீராப்பாண்டியன், மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி , மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் கருணாநிதி, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பெருமாள் மற்றும் பேரூர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.