AIADMK General Secretary Edappadi K. Palaniswami Birthday: Special pooja was performed in the temple under the leadership of Perambalur District Secretary R. Tamilchelvan, a golden chariot was pulled and Annadhanam
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாள் வரும் மே.12ம் வருகிறது. அதனை, முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலில், இன்று மாலை பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர். தமிழ்ச்செல்வன் தலைமையில் அதிமுகவினர் சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டனர். பின்னர் தங்கத் தேர் இழுத்து, அன்னதானம் வழங்கினர்.
இதில் முன்னாள் துணை சபாநாயகர், வரகூர் ஆ.அருணாசலம், ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், பேரூர் பொறுப்பாளர்கள், கீழப்புலியூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் ப.நடராஜன், பாளையம் சரவணன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.