AIADMK, like DMK, is not a tent of slaves! ! Activists at the meeting R.T. Ramachandran MLA Talk !!

பெரம்பலூர் ஒன்றிய அதிமுக, செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் பெரம்பலூரில், ஒன்றிய செயலாளர் எம்.செல்வக்குமார் தலைமையில் நடந்தது. ஒன்றிய அவைத் தலைவர் சந்திரசேகரன், ஒன்றிய இணைச் செயலாளர் பிரியாமாமுண்டி, ஒன்றிய துணைச் செயலாளர்கள ஜானகிசின்னசாமி, ஏ.டி.ஆர். துரைராஜ், ஒன்றிய பொருளாளர் கீழக்கரை டி. பன்னீர்செல்வம் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். அதில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமசந்திரன் பேசியதாவது:

தமிழ்நாட்டில் உள்ள பெண்கள், ஏழைகளுக்கான ஆட்சி அதிமுகதான். திமுகவை போன்று தொண்டர்களை சுரண்டி பிழைக்கும் கட்சி அல்ல. கட்சியில் வாரிசு அரசியல் கிடையாது. தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கட்சியின் பொறுப்புகளுக்கு வருவது கிடையாது. என்னை போன்று சதாராண தொண்டன் எம்.பி. எம்.எல்.ஏ ஏன் முதலமைச்சர் கூட ஆகலாம். ஆனால் திமுகவில் அப்படி ஒரு வாய்ப்பில்லை. அம்மா தலைமையிலான அரசு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து முன்னேற பல திட்டங்கள் கொடுத்து வருகிறது, அதோடு நீட் தேர்வை கொண்டு வந்தது, திமுக தலைமையில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தான் என்பதை திமுக மறுக்க முடியுமா! காங்கிரஸ் கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி தானே வழக்காடி நீட் தேர்வை கொண்டுவந்தார். அரசு பள்ளியில் 12ம் வகுப்பு வரை படிக்கும் ஏழை எளிய குடுபத்தை சேர்ந்த மாணவர்கள் முன்னேற்ற வேண்டும் என்றுதான் தமிழக அரசு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கொண்டு வந்து படிக்க வைத்து வருகிறது. ஆகவே, அதிமுக தலைமையிலான அரசு செயல்படுத்தி திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்து, திமுகவின் பொய்பரப்புரையை முறியடித்து 3வது அதிமுக ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும் என்றும், பெரம்பலூர் நகரம் மற்றும் ஒன்றிய அதிமுகவில், ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள், பெண்கள் அதிகளவில் இணைந்து வருவதை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறோம். இதுவே மக்களின் அங்கீகாரம் என பேசினார். திமுக போல் அதிமுக கொத்தடிமைகளின் கூடாரம் அல்ல! தொண்டார்களால் நடத்தப்படும் கட்சி. ஒரே குடும்பம் அப்பன், மகன், பேரன், என தலைமுறை தலைமுறைகளாக ஏய்க்கும் கட்சி அல்ல! தலைவர் கட்சியை ஆரம்பிக்கும் போதே குடும்ப ஆட்சியை எதிர்த்தே ஆரம்பித்தார். அது போல் கட்சியில் இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் குடும்ப வாரிசுகள் யாரும் கட்சிப் பதவிகளில் இதுவரை வரவில்லை. நீங்களும் என்னைப்போல் கட்சிக்காக உழைத்தால் உயரமுடியும். அதிமுக யாருக்கும் சொந்தமான குடும்ப கட்சி அல்ல. இது முழுக்க முழுக்க தொண்டர்களுக்கு சொந்தமான கட்சி. தொண்டர்கள் நீங்கள்தான் கட்சித் தலைவரையும், முதலமைச்சர் வேட்பாளரையும் தேர்வு செய்கிறீர்கள். திமுக கட்சியை போன்று அதிமுவில் யாரும், வீட்டில் உள்ள பொண்டாட்டியின் நகையை அடகு வைத்து தலைவனை வரவேற்க பேனர் வைத்து செலவு செய்ய வேண்டியதில்லை. உண்டியல வசூல் கிடையாது. பெரம்பலூர் சட்ட மன்ற தேர்தலில் அதிமுக சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவரை வெற்றி பெற செய்ய வேண்டியது, நமது கடமை. கடந்த எம்.பி மற்றும் உள்ளாட்சி தேர்தலை போன்று கோட்டை விட்டுவிடாமல், வரும் சட்ட மன்ற தேர்தலில், மூன்றாவது முறையாக அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்து மீண்டும் பெரம்பலூர் அதிமுவின் கோட்டை என நிரூபிக்க வேண்டும் என பேசினார்.

கூட்டத்தில், பெரம்பலூர் எம்.எல்.ஏவும், மாவட்ட மாணவரணி செயலாளருமான ஆர். தமிழ்ச்செல்வன், மாநில மீனவர் அணி இணைச் செயலாளர் பி.தேவராஜன், மாவட்ட துணைச்செயலாளர் கு.லெட்சுமி, மாவட்ட மகளிரணி செயலாளர் க.ராஜேஸ்வரி, குரும்பலூர் பேரூர் செயலாளர் செல்வராஜ், பெரம்பலூர் நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி, உள்பட 20 ஊராட்சிகளை சேர்ந்த கிளை பொறுப்பாளர்கள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள், பெண்கள், இளம்பெண்கள், குழந்தைகள், கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், ஊராட்சி தலைவர்கள் எசனை சத்யாபன்னீர்செல்வம், கோனேரிப்பாளையம் கலையரசிரமேஷ் உள்ளிட்டோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றிய ஐ.டி. பிரிவு செயலாளர் எம்.சக்திவேல் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் அருணாபாண்டியன் நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!