AIADMK protest in Perambalur demanding to stop the increase in the price of essential commodities!
பெரம்பலூர் கலெக்டர் ஆர்ச் அருகே திமுக அரசை கண்டித்தும், தக்காளி, வெங்காயம், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வரக் கோரி அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கூட்டத்தில், திமுக அரசை கண்டித்தும், மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும், கண்டன கோசங்கள் எழுப்பி, ஆர்பாட்டம் நடத்தினர்.
இதில் முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, ஆ. அருணாசலம், முன்னாள் எம்.பிக்கள் சந்திரகாசி, மருதைராஜா, முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஆர்.தமிழ்ச்செல்வன், பூவை.செழியன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.என்.ராஜாராம், மாவட்ட பொறுப்பாளர்கள் ராணி, லட்சுமி, அணிச் செயலாளர்கள், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன், செல்வகுமார், செல்வமணி, சந்திரகாசி, ரமேஷ், சசிக்குமார் மற்றும் கீழக்கரை து. பன்னீர்செல்வம், குன்னம் குணசீலன், குரும்பாபாளையம் சி.நாகராஜன், குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லப்பைக்குடிக்காடு பேரூர் செயலாளர்கள், கிளை செயலாளர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர் கலந்து கொண்டனர்.