AIADMK protest tomorrow against DMK-persons who attacked government officials; Perambalur District Secretary R. Tamilselvan call!
கடந்த மாதம் அக்டோபர் 30ம் தேதி கல்குவாரி டெண்டர் சம்பந்தமாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திமுக அரசை கண்டித்தும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி அறிவித்தார்.
அதன்படி நாளை காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய,நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொள்ள வேண்டும் என பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர். தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.