AIADMK should dissolve the regime and meet the election: Kunnam AIADMK MLA RTR interview
பெரம்பலூர்:அதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் குன்னம் அதிமுக எம்.எல்.ஏவும் மாவட்ட செயலாளரான ஆர்.டி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், செந்துறையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
அதிமுக ஆட்சி நடக்கும் போதே அதிமுகவின் இரு அணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் ஊழல் ஆட்சி என்று கூறிவருகின்றனர்.
இது வெட்க கேடானசெயல் ஆகும் எனவே தமிழ முதல்வர் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் தேர்தலை சந்திக்க வேண்டும்.
ஜெயலிலதா ஆட்சி வரவேண்டும் என என்னுபவர்கள் ஜெயலலிதா பெயர் சொல்லியும், சசிகலா ஆட்சி வேண்டும் என்பவர்கள் சசிகலா பெயரை சொல்லியும் தேர்தலை சந்திக்கட்டும் இதுஎன்னுடைம தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ளார்.