AIADMK should try to form a government for the 3rd time: RT Ramachandiran speaks at activists’ meeting in Perambalur!

வரும் 2021 சட்ட மன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்த பெரம்பலூர் நகர அதிமுக செயல்வீரர்கள் – செயல்வீரங்கணைகள் கூட்டம், நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி தலைமையில் நடைபெற்றது. நகர அவைத்தலைவர் எஸ்.காமராஜ் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் வேப்பந்தட்டை என்.சிவப்பிரகாசம். பெரம்பலூர் செல்வக்குமார், குரும்பலூர் பேரூர் செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர் எழிலரசிராவணன், நகர துணை செயலாளர்கள் என்.சுப்பிரமணியன், நீலாசேகர், நகர பொருளாளர் ஜெகதீஸ்வரன், மாவட்ட பிரதிநிதிகள் லெட்சுமி சரவணண், மு.வெங்கடேசன், நகர மகளிரணி செயலாளர் தனலெட்சுமி, நகர இளைஞரணி செயலாளர் சிவக்குமார், நகர மாணவரணி செயலாளர் என்.ராஜா, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தீபன்ராஜ், சின்னராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழச்செல்வன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட இணைச்செயலாளர் ராணி ஆகிய சிறப்புரை நிகழ்த்தினர். கூட்டத்தில், கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள பெண்கள், ஏழைகளுக்கான ஆட்சி அதிமுகதான் அதிமுகதான். திமுகவை போன்று தொண்டர்களை சுரண்டி பிழைக்கும் கட்சி அல்ல. கட்சியில் வாரிசு அரசியல் கிடையாது. தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கட்சியின் பொறுப்புகளுக்கு வருவது கிடையாது. என்னை போன்று சதாராண தொண்டன் எம்.பி. எம்.எல்.ஏ ஆகலாம். ஆனால் திமுகவில் அப்படி வாய்ப்பில்லை. அம்மா தலைமையிலான அரசு பெண்களுக்கும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து முன்னேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது, அதோடு நீட் தேர்வை கொண்டு வந்தது, திமுக தலைமையில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தான் என்பதை திமுக மறுக்க முடியுமா! காங்கிரஸ் கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி தானே வழக்காடி நீட் தேர்வை கொண்டுவந்தார். அரசு பள்ளியில் 12ம் வகுப்பு வரை படிக்கும் ஏழை எளிய குடுபத்தை சேர்ந்த மாணவர்கள் முன்னேற்ற வேண்டும் என்றுதான் தமிழக அரசு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கொண்டு வந்து படிக்க வைத்து வருகிறது. ஆகவே, அதிமுக தலைமையிலான அரசு செயல்படுத்தி திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்து, திமுகவின் பொய்பரப்புரையை முறியடித்து 3வது அதிமுக ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும் என்றும், பெரம்பலூர் நகர அதிமுகவில், ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள், பெண்கள் அதிகளவில் இணைந்து வருவதை பார்க்கும் போது, நகர செயலாளர் தம்பி ராஜபூபதியை பாராட்டுவதோடு, அதிமுக கொள்கைளால் இளைஞர்களை கவர்ந்துள்ளது என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம். இதுவே மக்களின் அங்கீகாரம் என பேசினார். கூட்டத்தில் மாநில மீனவர் அணி இணைச் செயலாளர் பி.தேவராஜன், மாவட்ட துணைச்செயலாளர் கு.லெட்சுமி, மாவட்ட மகளிரணி செயலாளர் க.ராஜேஸ்வரி, உள்பட நகரத்தில் 21 வார்டுகளை சேர்ந்த கிளை பொறுப்பாளர்கள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள், பெண்கள், இளம்பெண்கள், குழந்தைகள், கட்சி பிரமுகர்கள் என பெரும் திரளாக கலந்து கொண்டனர். நகர துணைச் செயலாளர் என்.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!