Air Force Airman exam training camp in Namakkal: Collector Announcement
விமானப்படையில் ஏர்மேன் பணியிடங்களுக்கான தேர்வுக்காக நாமக்கல்லில் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
இந்திய விமானப்படைக்கான ஆட்சேர்ப்பு ஜூன் 2-வது வாரத்தில் தஞ்சாவூரில் நடைபெறுகிறது. இதற்கென சிறப்பு நிகழ்வாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மூலம் இந்திய விமானப்படை பணியிடங்களுக்கான ஏர்மென் தேர்வு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் 5ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் ஏர்மென் தேர்வு மையத்தை சார்ந்த அலுவலர் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருகை தந்து இப்பணிக்கான எழுத்துத் தேர்வு, பணிநியமனம், ஊதிய விவரம், பணிக்கான சலுகைகள் போன்ற பணி தொடர்பிலான விவரங்கள் அடங்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை பவர் பாய்ண்ட் மூலம் விளக்கமளிக்கிறார்.
எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 12 ம் வகுப்பு (அறிவியல் பிரிவு) தேர்ச்சி பெற்ற 17 முதல் 21 வயது வரையிலான மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.