Aishwarya Teen Mystery death: District SP Did not conduct a proper investigation: G.Ramakirshnan charge.

பெரம்பலூர் அருகே இளம் பெண் ஐஸ்வர்யா மர்ம சாவில் போலீஸ் எஸ்.பி நடத்தவில்லை என மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமக்கிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள சிபிஎம் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ள மாவட்டக் குழு கூட்டத்திற்கு வருகை தந்த மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குரும்பலூர் கிணற்றில் மர்மமான முறையில் இறந்துபோன இளம்பெண் ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் சந்தித்தனர். அப்போது ஆறுதல் கூறிய ஜி.ராமகிருஷ்ணன் நடந்த சம்பவத்தை விளக்கமாக கேட்டறிந்தார்.

பின்னர் இதுபற்றி அவர் கூறியதாவது:

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரில் விவசாயி ஒருவரின் வயலில் இளம் பெண் சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து போலீசார் சட்டப்பிரிவு 174 ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். காதலர்களான பார்த்தீபன் – ஐஸ்வர்யா ஆகிய இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும் காதலனாகிய பார்த்தீபன் மற்றும் அவரது நண்பர் மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்த ராஜவேல் மகன் சரண்ராஜ் ஆகியோர் ஐஸ்வர்யா இறப்பிற்கு காரணமாக இருந்துள்ளார்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தரப்பில் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்கள். ஆனால், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இவ்வழக்கில் நேரடியாக இது வரை எந்தவொரு விசாரணையும் முறையாக மேற்கொள்ள வில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

இவ்வழக்கில் ஐஸ்வர்யாவின் பெற்றோரிடத்தில் காவல் துறையினர் சம்வபம் குறித்து இதுவரையில் எந்தவொரு விசாரணையும் செய்யவில்லை எனவும் பெற்றோர்கள் தன்னிடத்தில் தெரிவித்ததாகவும் கூறினார்.

மேலும் தற்போது இவ்வழக்கில் பார்த்தீபன் அவரது நண்பர் சரண்ராஜ் ஆகியோர் மீது 263 மற்றும் 174, 306 வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் விதிகள் படி உள்ள பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இளம்பெண் மரணத்தில் உண்மை நிலையை தீவிர விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அப்போது சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.செல்லதுரை, ஆர்.அழகர்சாமி எ.கலையரசி, பி.ரமேஷ், வட்ட செயலாளர் ராஜாங்கம் உள்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!