Aishwarya young girl Mystery death to arrest the culprits the Popular fronts of india Resolution passed

இளம் பெண் ஐஸ்வர்யா மர்ம சாவுக்கு காரணமான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் : பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியாவின் பெரம்பலூர் மாவட்ட யூனிட் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று பெரம்பலூர் உழவர் சந்தை அருகே உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் அமீர் பாஷா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சித்திக் வரவேற்றார்.

மாநிலத் தலைவர் எம்.முஹமது இஸ்மாயில் சிறப்புரை ஆற்றினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவர் முஹம்மது ரபீக், மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.இதயத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், உயர்க் கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் ரோஹித் வேமுலா, முத்துக்கிருஷ்ணன் போன்ற தலித் மாணவர்கள் இறப்பு குறித்து நீதி விசாரணை வேண்டியும், இறந்த மாணவர்களின் குடுபம்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில் திட்டத்தை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்காமல் விட்டுவிட்டது ஏமாற்றம் அளிப்பதாகவும், மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நடந்த தலித் இளம் பெண்களின் சாவிற்கு காரணமான குற்றவாளிகளை விரைவாக விசாரித்து தண்டனை வழங்கவும், இது போன்ற இறப்புகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெரம்பலூர் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவை தரம் உயர்த்துவதோடு. பெரம்பலூர் அரசு மருத்துவ கல்லூரின் கட்டுமான பணிகளையும் துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெரம்பலூர் ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் சித்திக் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!