Alcohol free Padalur: Victory by women struggle

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் ஊட்டத்தூர் செல்லும் சாலையில் அரசு மதுபான கடை இயங்கி வந்தது. இந்த கடையால் அப்பகுதி மக்களுக்கு மதுகுடிப்பவர்களால் இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்து வந்தது.

மேலும் அப்பகுதியில் குடிகாரார்களால் வீசப்படும் பிளாஸ்டிக் பேப்பர்களால் குப்பை மேடாகி அப்மபகுதி மண் வளம் பாதிக்கபடுவதாக இயற்கை ஆர்வலர்கள் புகார் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் அதே ஊட்டத்தூர் சாலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இரண்டாவது மதுபான கடை திறக்கபட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஊட்டத்தூர் பொதுமக்கள் போராட்டம் செய்ததில் அந்த கடை திறந்து 10 தினங்களில் மூடப்பட்டது.

இதனை தொடர்ந்து ஏற்கனவே இருந்த மதுபான கடையை மதுபான கடையை மூட வேண்டும் என பாடாலூர் பொதுமக்கள் போராட்டம் செய்தனர்.

குறிப்பாக பெண்கள், மதுபான கடையை திறக்கபட்டால் தீக்குளிப்போம் என தீவிரமாக போராட்டம் செய்தனர்.

இதனையடுத்து அதிகாரிகளால் மதுபான கடை பூட்டபட்டு சீல் வைக்கபட்டது. இனி பாடாலூரில் மதுவிலக்கு அமல்படுத்தபட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!