Alcoholic drinker arrested for hitting the seller with a bottle who asked for extra money for the quarter!
பெரம்பலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. சிறுகன்பூரை சேர்ந்த நடராஜன் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இன்று மாலை சுமார் 7.45 மணி அளவில், பெரம்பலூர் சங்குபேட்டை பகுதியை சேர்ந்த கலாநிதி மது வாங்க சென்றுள்ளார். அப்போது விற்பனையாளர் நடராஜன் குவாட்டர் மதுபாட்டிலுக்கு பாட்டிலுக்கு ரூ. 130-ம், பாட்டிலை திரும்ப கொண்டு வந்து கொடுக்க ரூ.10 யை வைப்புத் தொகையாக பெற்றதோடு மட்டுமில்லாமல் கூடுதலாக ரூ.5 கேட்டதாகவும், அதை கொடுக்காததால் , விற்பனையாளர் பாட்டிலை திரும்ப வந்து கொடுத்தால், ரூ.10-ய திருப்பி வழங்கும் ஸ்டிக்கர் மீது, பெருக்கல் குறி போட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கலாநிதி, தினசரி உங்களிடம் தானே வாங்கி வருகிறேன் மீதி பின்னர் தர மாட்டேனா கோபம் அடைந்து பாட்டிலால் தாக்கியனாராம். இதில் விற்பனையாளர் நடராஜனுக்கு நெற்றியின் இடது பக்கத்தில் காயம் ஏற்பட்டதால், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார், பெரம்பலூர் போலீசார் கலாநிதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.