All election promises will be fulfilled: Interview with DMK candidate Arun Nehru who filed nomination in Perambalur!
பெரம்பலூரில் இன்று திமுக சார்பில், எம்.பி தேர்தலுக்கான வேட்பாளர் அருண்நேரு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயம், வேலைவாய்ப்பு, கல்வி, தொழில்துறையில் பின்தங்கிய இப்பகுதியை முன்னேற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்படும், என்றும் இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்த உடன் திமுக அளித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும், என தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த லட்டர் அனுப்பினாலும், நோ என்ற பதிலே வருகிறது. பல இடங்களில் திமுக சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர், இளைஞர்கள், மகளிர்கள் தமிழ் அடையாளத்தை அமுக்குவதாகவும், கடந்த 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் முன்னேறி இருப்பதாகவும், அதற்கு மக்கள் இண்டியா கூட்டணிக்கு ஆதராக இருக்கிறார்கள் என தெரிவித்தார். மேலும், சோசியல் மீடியாவில் யார் என்ன அவதூறு கருத்துகளை பரப்பினாலும், திமுக உள்ள இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார்.
தொண்டர்கள் கரகோசம் எழுப்பி வேட்பாளர் அருண்நேருவிற்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அப்போது பெரம்பலூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், திரளாக மேளதாளத்துடன் ஆரவாரமாக அழைத்து சென்றனர்.