All fertilizer retailers should keep a price list – Department of Agriculture
வேளாண் இணை இயக்குநர் ஆர்.சுதர்சன் விடுத்துள்ள தகவல்.
பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளால் பயன்படுத்தப்படும் இராசயன உரங்களின் புதிய விலை விபரங்கள் கீழ்க்கண்ட விவரப்படி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மங்களூர் கெமிக்கல்ஸ் அண்டு பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 50 கிலோ உர மூட்டைகளான,யூரியா ரூ.295-, டி.ஏ.பி. ரூ.1105-, பொட்டாஷ் ரூபாய்.579-, காம்ப்ளக்ஸ் 15:15:15:09 ரூபாய்.906-, காம்ப்ளக்ஸ் 20:20:0:13 ரூபாய்.872-ஆகவும்,
பெர்டிலைசர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் நிறுவனத்தின் 50 கிலோ உர மூட்டைகளான, காம்ப்ளக்ஸ் 20:20:0:13 ரூபாய்.903-, காம்ப்ளக்ஸ் 20:20:0:13:03 ரூ.929-, அம்மோனியம் சல்பேட் ரூ.675.50-, பொட்டாஷ் ரூ.571.60- ஆகவும்,
நாகார்ஜூனா பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 50 கிலோ உர மூட்டைகளான யூரியா ரூ.295-க்கும், சதர்ன் பெட்ரோ கெமிக்கல்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரிஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுனத்தின் 50 கிலோ உர மூட்டைகளான யூரியா ரூ.295-, டி.ஏ.பி. ரூபாய்.1165.50-, காம்ப்ளக்ஸ் 20:20:0:13 ரூ.857.50-, காம்ப்ளக்ஸ் 10:26:26 ரூ.1081.50-, எஸ்.எஸ்.பி ரூபாய்.378-ஆகவும்,
கொரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் 50 கிலோ உர மூட்டைகளான டிஏபி ரூ.1081- ஜிங் டிஏபி ரூ.1107-, காம்ப்ளக்ஸ் 20:20:0:13 ரூ.873-, காம்ப்ளக்ஸ் 16:20:0:13 ரூ. 821- காம்ப்ளக்ஸ் 17:17:17 ரூ. 946-, காம்ப்ளக்ஸ் 10:26:26 ரூ.1044-, காம்ப்ளக்ஸ் 14:35:14 ரூ 1122-, காம்ப்ளக்ஸ் 24:24:0:8 ரூ.966-, காம்ப்ளக்ஸ் 28:28:0 ரூ.1122-ஆகவும்
ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு பெர்டிலைசர்ஸ் நிறுவனத்தின் 50 கிலோ உர மூட்டைகளான யூரியா ரூ.295-, காம்ப்ளக்ஸ் 15:15:15 ரூ.887ஃ-, டிஏபி ரூ.1076- ஆகவும்,
இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் நிறுவனத்தின் 50 கிலோ உர மூட்டைகளான டிஏபி ரூ.1086-, பொட்டாஷ் ரூ.580-, காம்ப்ளக்ஸ் 20:20:0:13 ரூ.865-, காம்ப்ளக்ஸ் 16:16:16 ரூ.892-, காம்ப்ளக்ஸ் 15:15:15:09 ரூ.890-ஆகவும்
மொசைக் நிறுவனத்தின் 50 கிலோ உர மூட்டைகளான டிஏபி ரூ. 1086.50-, பொட்டாஷ் ரூ. 577.50-, கோயம்புத்தூர் பயோனியர் பெர்டிலைசர் நிறுவனத்தின் 50 கிலோ உர மூட்டைகளான எஸ்.எஸ்.பி. ரூ.362-, மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 50 கிலோ உர மூட்டைகளான யூரியா ரூ.295.10, காம்ப்ளக்ஸ் 17:17:17 ரூ. 989.50-ஆகவும்,
இப்கோ நிறுவனத்தின் 50 கிலோ உர மூட்டைகளான யூரியா ரூ.295-, டிஏபி ரூ.1076-, காம்ப்ளக்ஸ் 20:20:0:13 ரூ. 850-, காம்ப்ளக்ஸ் 10:26:26 ரூ.1055-, காம்ப்ளக்ஸ் 12:32:16 ரூ.1061-ஆகவும், விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலை விபரத்தை அனைத்து உர விற்பனையாளர்களும், தங்களது விற்பனை நிலையத்தில் விலைப் பட்டியல் பலகையில் தவறாது எழுதி வைக்க வேண்டும். மேலும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்பவர்கள் மீது உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்துள்ளார்.