All medical facilities ready for patients affected by coronavirus: Perambalur Collector

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலும், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி காணப்படும் நபர்களை தனிமை படுத்தும் வகையிலும் அரசு தலைமை மருத்துவமனையின் கூடுதல் கட்டிடம் மற்றும் கவுள்பாளையத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு பிரிவுகளை மாவட்ட கலெக்டர் வே. சாந்தா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் அரசால் பிறப்பிக்கபட்ட ஊரடங்கு உத்தரவின் மூலம் பொதுமக்களுக்கு சிரமமின்றி அத்தியாவசியப்பொருட்கள் கிடைக்கவும், பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதை தடை செய்யும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அறிகுறி காணப்படும் நபர்களை கண்டறிந்து சுகாராரத்துறையின் மூலம் அவர்களது இல்லங்களிலே தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நபர்களின் சிகிச்சைக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கட்டிடங்களை கொரோனா சிறப்பு பிரிவாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆணையின் கீழ் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையின் கூடுதல் கட்டிடத்தில் 300 படுக்கைகளும், கவுள்பாளையத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பில் 200 படுக்கைகளும் என கூடுதலாக 500 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனைகளாக மாற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். அப்போது, மருத்துவ நல பணிகள் துறையின் இணை இயக்குநர் திருமால், பொதுப்பணித்துறையினர் பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!