Almighty Public School’s 8th Anniversary Celebration; International Businessman DATO S PRAKADEESH KUMAR participation! Chairman A. Ramkumar Information!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி இயங்கி வருகிறது. அதன் 8ம் ஆண்டு விழா நாளை பிப்.3 மாலை 5 மணி அளவில் சிறுவாச்சூரில் பள்ளி வளாகத்தில் நடக்கிறது என அதன் தாளாளர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது: ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியின் 8 ம் ஆண்டு விழா ரிதம் கலர்ஸ் என பெயரில் பள்ளி வளாகத்தில் கொண்டாடப்படுகிறது. இதில் பன்னாட்டு தொழிலதிபரும், பெரம்பலூர் மண்ணின் மைந்தனுருமான டத்தோ. எஸ். பிரகதீஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்ற உள்ளார். மேலும் பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் குழுவினர் மற்றும் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள் இணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.