Almighty Vidyalaya Public school Students pledge plastic prevention awareness Commitment
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் உபயோகத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் ராம்குமார் தலைமை வகித்து, பிளாஸ்டிக் பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள், அதற்கு மாற்றான துணிப் பைகள், பாக்கு மட்டைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவது குறித்து விளக்கி பேசினார்.
பின்னர், பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பு, மரம் நடுவதன் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் குறித்து மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சிவகாமி, துணை முதல்வர் சாரதா, ஒருங்கிணைப்பாளர்கள் ஹேமா, சந்திரோதயம் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.