Along with various demands for Perambalur district, the MLA Prabhakaran speech in the Legislature sought to start the new medical college in the first phase.

பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், இன்று நடந்த சட்ட மன்ற கூட்டத் தொடரில் பேசியதன் சுருக்கம்:

பெரம்பலூர் மாவட்டத்திற்கென்று புதிய மருத்துவக் கல்லூரியை கடந்த 2011 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரால், அறிவிக்கப்பட்டு கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கிடப்பில் போடப்பட்டது நமது திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டப்பேரவை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதன் எதிரொலியாக தற்பொழுது அறிவிக்கப்பட்ட 6 மருத்துவக் கல்லூரிகளில் Phase-II-ல் தொடங்கப்படவுள்ளதாக என அறிய வருகிறேன்

ஆனால், எங்களது, பெரம்பலூர் மாவட்டம் தோன்றி 30 ஆண்டுகள் ஆவதோடு மட்டுமல்லாமல் தலைவர் கலைஞரால் அறிவிக்கப்பட்டு நின்றுபோன கல்லூரி என்பதால் பெரம்பலூர் மாவட்டத்திற்கு முன்னுரிமை அளித்து Phase-1 லேயே துவங்க அனுமதித்து அந்த மருத்துவக் கல்லூரிக்கு தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவை ஒட்டி கல்லூரிக்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மருத்துவக் கல்லூரி என பெயர் வைக்க வேண்டுமென கோரிக்கையை முதல்வர் மற்றும் , மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரையும் கேட்டுக் கொள்வதாகவும்,

எனது பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் சிப்காட் மூலமாக பினிக்ஸ் மற்றும் கோத்தாரி நிறுவனம் இணைந்து எங்கள் பகுதி பெண்கள், இளைஞர்கள் கிட்டத்தட்ட 30,000 நபர்களுக்கு மேல் வேலைவாய்ப்பு பெறுகின்ற வகையில் புதிய காலனிப் பூங்கா அமைக்க தமிழக முதல்வர் நேரில் வந்து அடிக்கல் நாட்டிய ஒரே வருடத்தில் தனது உற்பத்தியை தொடங்கும் பொழுதும் அதைக் காணொளி வாயிலாக தொடங்கிவைத்த தமிழக முதல்வருக்கும், தொழிற்துறை அமைச்சருக்கும், நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும்,

முத்தான மூன்றாண்டு கழக ஆட்சியில் எனது தொகுதியில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 107 பணிகளுக்காக 106 கோடி ஒதுக்கப்பட்டு பணி முடிக்கப்பட்டதற்கும். நெடுஞ்சாலை துறை நபார்டு மற்றும் கிராமச் சாலை அலகின் மூல கோடி மதிப்பிட்டில் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ள

உயர்மட்ட பாலங்கள் கட்ட 27.45 பணிகள் நிறைவுற்றதற்கும், கோடி ஒதுக்கப்பட்டு, தடுப்பணைகள் கட்ட 26.93 கோடி ஒதுக்கப்பட்டதற்கும், ஊரக 25.82 சாலைகள் பணிக்காக ஒதுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டதற்கும். கோடி ரூபாய்
புதிய கட்டிடங்களான நீதிமன்றம் ஆண்கள், பெண்கள் தங்கும் விடுதியில் தொழிற் பயிற்சிக் கூடம் பள்ளி வகுப்பறைகள்,மருத்துவமனைகள். கல்லூரி வகுப்பறைகள் ஆகியவற்றுக்கு ரூ.24.23 கோடி ஒதுக்கப்பட்டதற்கும்.

பசும்பலூர் ஓடையில் வெள்ளுவாடி பகுதிகளில் அமைந்துள்ள தாழம்பு மேம்பாலம் உயர்மட்ட ஒதுக்கப்பட்டதற்கும் கட்ட 2.45 கோடி இந்த அவையின் வாயிலாக நீர்வளத்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை, மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும்,

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தை கடலூர் இணைக்கும் இரண்டு உயர்மட்ட மேம்பாலம். மாவட்டத்தோடு திருவாளந்துறை -கீழ்கல்பூண்டி பகுதியில் வெள்ளாற்றின் குறுக்கே உயர் மட்டமேம்பாலம் கட்ட 8.73 கோடி, வெள்ளுவாடி-கொரக்கவாடி பகுதியில் வெள்ளாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்ட ரூ.5.56 கோடி, காவேரி கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகளும்,
பெரம்பலூர் நகராட்சியை பழைய பேருந்து நிலையத்தை புதியதாக சீரமைக்க ரூபாய் 3.72 கோடி ஆகிய பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு இந்த அவையின் வாயிலாக முதலமைச்சருக்கும்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருக்கும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்றும்,

பெரம்பலூர் நகராட்சியிலுள்ள சுமார் 65 ஆயிரம் மக்களுக்குத் தேவையான அளவு குடிநீர் வழங்கும் பொருட்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் எறையூர் மற்றும் பாடலூரில் அமைந்துள்ள சிப்காட் தொழில் வளாகத்திற்குத் தேவையான நீரை வழங்கும்பொருட்டும். ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் 366 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த நிதி வழங்கிய தமிழக முதல்வர் அவர்களுக்கும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், எனன்றும்,

இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக்கோரிக்கையில் என்னைப் பேசுவதற்கு அனுமதி அளித்த சட்டப் பேரவைத் துணைத்தலைவர், சட்டப் பேரவை கொறடா கோவி.செழியன் சட்டப் பேரவை செயலாளர், சட்டப் பேரவை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக்கோரிக்கை
இந்தியாவுக்கே முன்னோடியாகவும், கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், விளங்கி வருகின்ற கூட்டுறவு துறையின் சார்பாக தமிழகத்தில் 22925 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 2006-2011 ஆட்சிக்காலத்தில் முத்தமிழறிஞர் தேர்தல் டாக்டர் கலைஞர் வாக்குறுதியின்படி இந்தியாவிலேயே முதல்முறையாக சுமார் 7000 கோடி ரூபாய் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்தார். இதையொட்டிதான் அன்றைய ஒன்றிய ஐக்கிய முன்னணி அரசு இந்தியாவில் அனைத்து தேசிய வங்கிகளில் விவசாயக்கடனையும் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளின் முன்னேற்திற்காக கூட்டுறவு துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன குறிப்பாக உழவர் கடன் அட்டை திட்டம்- பயிர்க்கடன், உழவர் கடன் அட்டை திட்டம்- கால்நடை வளர்ப்பு கடன், தானிய ஈட்டுக்கடன்

நலிவடைந்தவர்களை முன்னேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
சுய உதவிக் குழுக்கள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் கடன்கள்.
மாற்றுத்திறனாளிக்களுக்கான கடன்

மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்குவதில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ்நாடு மாநிலத் தலைமைச் கூட்டுறவு வங்கி சிறப்பு கடன் வழங்கும் நிறுவனம் என்ற ஒன்றிய அரசின் விருதை தொடர்த்து (5 முறை) பெற்று வருகிறோம். என்பது கூட்டுறவு துறைக்கு பெருமை சேர்க்கும் நெகிழ்வாகும்.

அன்றும் இன்றும் இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கும் திராவிட மாடல் ஆட்சியில் நம்முடைய முதல்வர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 4818.88 கோடி 12/25 நகைக் கடன்களையும். 2755 சுய உதவிக்குழு கடனையும் தள்ளுபடி செய்ததன் மூலம் 1,17,617 குழுக்களில் சுமார் 15,88, 309 சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர்.

பயிர்க்கடன்கள், கால்நடை பராமரிப்பு. சுயஉதவிக்குழு உள்ளிட்டவர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் சுமார் 14000 கோடி ரூபாய் கடந்த நிதியாண்டு கடனாக வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கத்தால் சுமார் 34,567 கூட்டுறவு சங்கங்களின் நியாயவிலைக்கடை அட்டைதாரர்களுக்கு மூலம் 2,11,34,697 பொருட்கள் குடும்ப விநியோகம் செய்யப்படுகிறது. ஊட்டி டீ, பனைவெல்லம், சிறுதானியங்கள், அரசு உப்பு ஐந்து கிலோ, இரண்டு கிலோ FTL எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது.

நகரும் நியாயவிலைக்கடை :
மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் தொலைதூரப்பகுதியில் வசிக்கும் குடும்ப அட்டை தாரர்கள். மற்றும் நியாய விலைக் கடையிலிருந்து வெகுதொலைவில் அல்லது இயற்கை தடைகளான ஆறுகள் மலைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு நகரும் நியாயவிலைக் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்பபடுகிறது . தமிழ்நாட்டில் சுமார் 2699 நடமாடும் நியாய விலைக்கடைகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மிக்ஜாம் புயல் நிவாரணப் பணி, தென்மாவட்டங்களில் வெள்ள நிவாரணப்பணி
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பதிக்கப்பட்டுள்ள சுமார் 23,18,200 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் ரூ6000/- வீதமும்,

தூத்துக்குடி, நிருநெல்வேலி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,39,970 குடும்பங்களுக்கு ரூ6000 வீதம் 13,38,269 குடும்பங்களுக்கு ரூ1000 வீதம் வழங்கப்பட்டது.

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்- அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு வழங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 15.09.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்ட, இத்திட்டத்தின் கீழ் 2023-24-ஆம் ஆண்டு வரை, .35.65 கோடி மதிப்பிலான 2, 366 மெ.டன் இருமுறை வறுக்கப்பட்ட ரவை, 1,604 மெட் டன் கோதுமை ரவை மற்றும் 1,948 மெட்ரிக் டன் சேமியா உள்ளிட்ட பொருட்கள் 28,397 தொடக்கப்பள்ளிகளி பயிலும் 15,40,658 அரசு மாணவ மாணவியர்களுக்கு காலை உணவு தயாரிக்க மதிய உணவு மையங்களுக்கு நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலைகள் மூலம் வழங்கி வருவது இந்த கூட்டுறவு துறைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும்.

தமிழகத்தின் ஏழை எளிய மக்களின் உணவு மற்றும். வாழ்வாதாரத்திற்காக செயல்பட்டு வரும், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நியாய விலைக்கடைகள் என்றென்றும் மக்களை விட்டு பிரிக்க முடியாத அளவிற்கு நம் திராவிட மாடல் முதல்வர் ஆட்சிக்காலத்தில் வலிமையாக செயல்பட்டு வருகிறது.


உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு :

தமிழ்நாட்டில் சமூக பொருளாதார முன்னேற்றத்தின் தந்தை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தோற்றுவித்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அவர் கொண்டு வந்த சிறப்பு பொதுவிநியோகத் திட்டம் மற்றும் அனைத்து குடும்பங்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க எடுத்த நடவடிக்கையின் காரணமாக தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்த மாநிலமாக காணப்படுகிறது.

அனைவருக்கும் உணவை உறுதி செய்து அனைவருக்கும் சத்தான உணவு என்ற இலக்கை எட்டியுள்ளது நமது அரசு. மன்றங்களில் முதல் நுகர்வோர் குறைதீர்க்கும் முறையாக அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பிட நுகர்வோர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி நுகர்வோர் பாதுகாப்பில் முன்னேற்றம் அடைதிருக்கிறோம்.

உணவுப் பொருட்கள் கடத்தல் மற்றும் பாதுகாப்பை தடுக்கும் பணிகளை துரிதப்படுத்தி உணவுப் பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தி இருப்பது உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சிறப்பான பணி ஆகும்.

நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழகம் முழுவதும் அமைத்து நெல் கொள்முதல் செய்வதோடு குருவை தொகுப்பை விவசாயிகளுக்கு வழங்கியதற்கு பாசன வசதிக்காக வாய்க்கால்களை தூர் வாரி விட விவசாயிகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படுத்தியதற்கு தமிழக முதல்வர் அவர்களுக்கு விவசாய சங்கம் நன்றி தெரிவித்து இன்று உணவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து இருப்பது ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக அமைகிறது

எனது தொகுதிக்குட்பட்ட கோரிக்கைகளை அவை குறிப்பில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்பி நிறைவேற்றி தரக் கேட்டுக்கொள்கிறேன்.

பெரம்பலூர் நகராட்சியானது வளர்ந்து வரும் நகரமாக உள்ளது சுமார் ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்டதாக உயர்ந்துள்ளது எனவே அருகில் உள்ள பகுதிகளை இணைத்து பெரம்பலூர் நகராட்சியை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கையாக வைக்கிறேன்.

பெரம்பலூர் MRF டயர் தயாரிக்கும் தொழிற்சாலை நமது தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் பெரம்பலூர் மாவட்ட படித்த இளைஞர்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பு உறுதி செய்ய வேண்டும். ஆனால் MRF நிர்வாகத்தினால் பெரம்பலூர் மாவட்ட படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை தருகிறார்களா? எவ்வளவு பேர் வேலை கேட்கிறார்கள்? எவ்வளவு பேருக்கு வேலை தருகிறார்கள் என்பதை தொழில் துறை அமைச்சர் அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கிறேன்

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியானது இரண்டரை தாலுக்காக்களைக் கொண்ட தொகுதி. இதில் 60 ஊராட்சிகள், 3 பேரூராட்சிகளில் சுமார் 200 கிராமங்களும் அடங்கியுள்ளது. இதில் ஏராளமான கிராமங்கள் இன்றும் வளர்ச்சியடையாமல் உள்ளது. எனவே அனைத்து கிராமங்களும் முன்னேறுகின்ற வகையில் இந்த தாலுக்காக்களை மூன்று தாலுக்காவாக பிரித்து, வாலிகண்டபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா மற்றும் யூனியன் அமைத்து அறிவிக்க வேண்டுமாறு இந்த பேரவையின் வாயிலாக மாண்புமிகு முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

அரும்பாவூர், குரும்பலூர், பூலாம்பாடி ஆகிய பேரூராட்சி அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யுமாறு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

எனது பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கல்பாடி, கல்பாடி எறையூர், எறையசமுத்திரம், அய்யலூர், அய்யலூர் குடிக்காடு, சிறுவாச்சூர் கிராமங்களில் உள்ள உறுப்பினர்கள் உள்ளடக்கியது, சிறுவாச்சூர் கிராமம் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சிறுவாச்சூரில் தனியாக துவங்குவதற்கு தீர்மானம் போடப்பட்டு அமைக்கப்படாமல் உள்ளது. எனவே சிறுவாச்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அமைக்க அமைச்சர் அவர்களை ஆவன செய்ய கேட்டுக்கொள்கின்றேன்.

எனது சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குரும்பலூர் ரெங்கநாதபுரம், செஞ்சேரி, போன்ற பகுதிகளில் மின்சாரம் தடையின்றி கிடைக்க 110/22KVA புதிய துணை மின் நிலையம் அமைக்க அனுமதி மற்றும் நிதி ஒதுக்குமாறு மின்சாரத் துறை அமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

எனது சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான, அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில், வாலிகண்டபுரம். அருள்மிகு தோளீஸ்வரர் திருக்கோவில், திருவாலந்துறை. அருள்மிகு ஆதிதாந்தோன்றீஸ்வரர் திருக்கோவில், காரியானூர், ஆகிய கோவில்கள் நீண்ட நாட்களாக திருப்பணி.குடமுழுக்கு செய்யாமல் உள்ளன. எனவே மேற்கண்ட கோவில்களுக்கு குடமுழுக்கு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

எனது தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை ஒன்றியம் கல்லாற்றில் வெண்பாவூர் சாலைக்கும். பாண்டகப்பாடி சாலைக்கும் இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அனுமதி மற்றும் நிதி வழங்குமாறு பொதுப்பணி துறை அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

எனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை ஒன்றியம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க நிதி, மற்றும் நிர்வாக அனுமதி வழங்க நீர்வளத்துறை அமைச்சர் அவர்களை வேண்டுகிறேன்.

நீண்ட நாட்களாக மக்களின் கோரிக்கையாக உள்ள வேப்பந்தட்டை ஒன்றியம் மலையாளப்பட்டியில் உள்ள சின்னமுட்லுவில் கல்லாற்றின் குறுக்கே அணை கட்டினால் அந்த ஒன்றியம் முழுமையும் பாசன வசதி பெறும் என்பதால். மேற்கண்ட அணை கட்ட அனுமதியும் நிதியும் ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நீண்ட நாட்களாக மக்களின் கோரிக்கையாக உள்ள வேப்பந்தட்டை ஒன்றியம் மலையாளப்பட்டியில் உள்ள சின்னமுட்லுவில் கல்லாற்றின் குறுக்கே அணை கட்டினால் அந்த ஒன்றியம் முழுமையும் பாசன வசதி பெறும் என்பதால். மேற்கண்ட அணை கட்ட அனுமதியும் நிதியும் ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள தேவையூர், வெங்கலம், நூத்தப்பூர் போன்ற பகுதிகளில் ஆதிதிராவிட மக்கள் அதிகமாக வசிக்கின்ற காரணத்தினால் அவர்களுக்கென்று தனி சமுதாயக் கூடங்கள் அமைக்க நிதி மற்றும் நிர்வாக அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எனது தொகுதிக்குட்பட்ட, அன்னமங்களம். தொண்டமாந்துறை, கைகளத்தூர், தேவையூர், V.களத்தூர் ஊராட்சிகளில் மக்கள் தொகையில் 15000-க்கும் மேற்பட்டோர் உள்ளதால் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது தொகுதிக்குட்பட்ட ஆலத்தூர் யூனியன் செட்டிக்குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஆறு வகுப்பறைக் கட்டிடம் கட்ட நிதி மற்றும் நிர்வாக அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எனது தொகுதிக்குட்பட்ட ஆலத்தூர் மற்றும் வேப்பந்தட்டை தாலுக்காக்களில் புதிய தீயணைப்பு அலுவலகம் அமைக்க அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது தொகுதிக்குட்பட்ட ஆலத்தூர் ஒன்றியம் புது அம்மாபாளையம், விராலிப்பட்டி, செட்டிக்குளம் சாலையை புதுப்பிக்க அனுமதி மற்றும் நிதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

எனது தொகுதிக்குபட்ட ஆலத்தூர் ஒன்றியம் செட்டிக்குளத்தில் புதிய அரசு பொறியியல் கல்லூரி அமைக்க அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது தொகுதிக்குட்பட்ட ஆலத்தூர் ஒன்றியம் தேனூரில் புதிய கால்நடை மருத்துவமனை அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பச்சை மலையில் இருந்து வரும் மழைநீர் அரும்பாவூர் பெரிய ஏரி சுமார் 242 ஏக்கரை தூர்வாரி நீரை சேமிக்க ஆவன செய்ய வேண்டுகிறேன்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது அதை இடித்து அந்த இடத்தில் புதிய வணிக வளாகங்களாக கட்டித்தர நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

புதிய ஆய்வு மாளிகை

பெரம்பலூர் நகரமானது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையின் மிக அருகே அமைந்துள்ளது. மேலும் திருச்சி. அரியலூர், துறையூர், ஆத்தூர். கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய நகரங்களுக்கு மையப்பகுதியில் அமைந்துள்ளதால். கள ஆய்வுக்காக செல்லும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு அமைச்சர்கள். தங்கி ஓய்வு எடுக்க எளிதாக அமையும் என்பதால் பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு 61601 புதிய ஆய்வு மாளிகை கட்டடம் கட்டித்தர மாண்புமிகு அமைச்சர் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்தும், அருகில் மாவட்டங்களான கடலூர், சேலம். திருச்சி உள்ள மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய எல்லையோர மாவட்டங்களிலிருந்து, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலையின் மிக அருகே அமைந்துள்ளதால் சாலை விபத்துகளால் பலத்த காயங்களுடன் வருபவர்களையும், மாரடைப்பு, பக்கவாதம் கடுமையான முழு தீக்காயம், மற்றும் கடுமையான நிமோனியா போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக திருச்சி, அரியலூர். தஞ்சாவூர், சேலம் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அத்தகைய மருத்துவ வசதி இல்லாததால் மேற்கண்ட நிலை ஏற்படுகிறது.

எனவே, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட அனைத்து நோய் சிகிச்சை அளிக்ககூடிய மையக் கட்டடம் கட்டித்தர மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.


கைகளத்தூர் ஊராட்சியில் கைகளத்தூரில் பேருந்து நிலையம் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. தற்போது ஆக்கிரமைப்பு அகற்றி ஏக்கர் கணக்கில் நிலம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு பேருந்து நிறுத்தம் இடம், நிழல்கூடம், பேருந்துகள் நிறுத்தும் இடத்திற்கு சிமெண்ட் தளம் அமைத்தல், ஆண்/பெண் கழிப்பிட வசதி, மின் விளக்கு, பேருந்து நிலையம் நுழைவு வாயில், குடிநீர் வசதி வணிக வளாகம், பேருந்து நிலையம் சுற்றிலும் கழிவு நீர் வாய்க்கால் அமைத்தல் அவை அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி உள் கட்டமைப்பு உருவாக்கினால் இந்த பகுதி மக்களுக்கு பயன் உள்ளதாக அமையும். எனவே, புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அவர்களை கேட்டுக் கொள்கிறேன். அமைச்சர்

நமக்கு இன்னலும் இடையூறும் இருக்கத்தான் செய்யும் ஆனால் நமது உழைப்பு ஒரு நாளும் வீண் போகாது என்ற அண்ணாவின் வார்த்தையை கையில் ஏந்தி நடைபெற இருக்கின்ற இடைத்தேர்தலாக இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும், 2026 சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் நமது இளந்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலோடு முழுமையான வெற்றியை முதல்வரின் கரத்திலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பாதத்திலும் சமர்ப்பிக்க உறுதி ஏற்போம்! உறுதி ஏற்போம்!! அனைவருக்கும் நன்றி என பேசினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!